Wednesday, November 14, 2007

கோவிந்தகுடி இளைஞர் நற்பணி மன்றம் மெட்ரிகுலேஷன் பள்ளி

பள்ளியின் தோற்றம்
1984 ம் ஆண்டில் செப்டம்பர் திங்கள் 19ம் நாள் கோவிந்தகுடி வாழ் இளைஞர்கள் ஒன்று கூடி உள்ளூர் சமூக பணிகளை நிறைவேற்றிடும் நோக்கில் இளைஞர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் மூலம் இந்த கிராமத்தில் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தந்தது. இந்நிலையில் உள்ளுர் சிறார்கள் ஆங்கில கல்வி கற்க நகரை நோக்கி சென்று அன்றாடம் சிரமத்துடன் வீடு திரும்புவதை கண்ணுற்ற எங்கள் உள்ளத்தில் நமது ஊல் ஒரு தரமான ஆங்கில பள்ளியை நிறுவவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதன் விளைவாக ராஜகிரி வெல்பேர் அசோசியேசன் செயலர் N. A. M. யூசுப் அலி அவர்களின் நல்ஆலோசனைகளுடன் 1987ம் ஆண்டு மே திங்கள் 30ம் நாள் மறைந்த கொடைவள்ளல் E. S. M. பக்கிர் முகம்மது அவர்களால் எங்களுர் பள்ளிவாசல் திறந்திட வருகை தந்த மறைந்த ஜனாதிபதி டாக்டர் ஜாஹிர்ஹூசைன் நினைவாக அவர்கள் பெயரில் கோவிந்தகுடி பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் தொடங்கப்பட்டது.

No comments: