இறைத்தூதர் அவர்களை அவமதித்த சங்தினமலரை தடைசெய்து இந்தியாவின் இறையான்மையை காக்க அரசு முன்வரவேண்டும்.
எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்த சங்பரிவார தினமலரை அரசு தடை செய்ய வேண்டும்.
அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ள சங்பரிவாரத்தின் ஊடகமான தினமலரை அரசு தடைசெய்வதுடன் கேளிச்சித்திரத்தை வெளியிடுவது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்திருந்தும் முஸ்லிம்களுக்கெதிராக போர்ப்பிரகடணம் செய்துள்ள அதன் ஆசிரியர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்திய நாட்டின் இறையாமையை காக்க அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.
இறைத்தூதர் முஹமது நபி (ஸல்) அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கார்டூன்களை வெளியிட்டடது. அதைத் தொடர்ந்து உலகம் முழுதும் பலத்த கண்டனக்குரல்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் மீண்டும் தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் இலவச இணைப்பாக வெளிவருகின்ற கம்ப்யூட்டர் இதழ். இணையதளம் ஒன்றில் பிரசுரமாகியிருந்த முஹமது நபிகள் குறித்த கார்ட்டூனை அந்த “தினமலர் கம்ப்யூட்டர்’’ 02/09/08 இதழில் பிரசுரமாக்கப்பட்டிருந்தது.
உலகமுழுதும் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிய செய்தியை மீண்டும் தினமலர் பிரசுரித்திருப்பதின் மூலம் முஸ்லிம்களை குறிப்பாக தமிழக முஸ்லிம்களை வம்புக்கிழுத்துள்ளது இந்த சங்கபரிவார தினமலர்.
புனித ரமலான் மாதத்தின் ஆரம்பத்தில் இவ்வாறன கேளிச்சித்திரத்தை வெளியிடுவது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்திருந்தும் எங்களின் உயிரின் மேலான இறைத்தூதர் அவர்களின் கேளிச்சித்திரத்தை வெளியிட்டுள்ள தினமலர் முஸ்லிம்களுக்கு எதிராக போர்பிரகடனம் செய்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ள சங்பரிவாரத்தின் ஊடகமான தினமலரை அரசு தடை செய்வதுடன் முஸ்லிம்களின் உயிரின் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கேளிச் சித்திரத்தை வெளியிட்டு சமூக கொத்தளிப்பு ஏற்படுத்திய அதன் ஆசிரியர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்திய நாட்டின் இறையாமையை காக்க வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோ
Thanks: Hussainghani
Saturday, September 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment