ஏரோப்ளேனிலோ, ஹெலிகாப்டரிலோ பறந்து கொண்டு இருக்கும்போது, வானில் இடி, மின்னல் தோன்றினால் உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
ஏரோப்ளேனோ, ஹெலிகாப்டரோ வானத்தில் தனியாகப் பறப்பதினால், அதன்மேல் இடி மின்னல் தாக்கும்போது முழு ஏரோப்ளேனும் ஒரு சார்ஜ் வாங்கிக் கொண்டு சமமான வோல்டேஜ் சக்தியில் இருக்கும். தரையில் இறங்கியதும். அதை எர்த் செய்யவில்லை என்றால், தொட்டவர்களுக்கு ஷாக் அடிக்கும். அதற்கு ஏவியேஷன் கெரஸின் நிரப்பும்போது முதலில் அதை எர்த் செய்து விட்டுத்தான் நிரப்புவார்கள்.
பறவைகளின் இனப்பெருக்கம் பற்றி... அதன் முட்டைகளில் எவ்வாறு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல், உணவும் இல்லாமல் குஞ்சு உருவாகி வளர்கிறது?
முட்டையின் உள்ளுக்குள் இருக்கும் மஞ்சள் கருவும் வெள்ளையும்தான் உணவுகள். மனிதக் கரு ஒரு செல்லிலிருந்து வளர்வது போலத்தான், முட்டைக்குள் ஒரு செல்லில் குஞ்சு துவங்கி, உட்கரு வெள்ளை, வெளிக்கரு முட்டையோடு என்று வளர்கிறது. காற்று முட்டை ஓட்டின் ஊடே கிடைக்கிறது. உணவு தாயின் உடலிலிருந்து உருவான அல்புமென்னும் புரதசக்தியும்.
No comments:
Post a Comment