Saturday, February 11, 2012

முஸ்லிம்கள் மீது பழிவாங்கும் போக்கை நீதிமன்றங்கள் கடைபிடிக்கிறதா ?


முஸ்லிம்கள் மீது பழிவாங்கும் போக்கை நீதிமன்றங்கள் கடைபிடிக்கிறதா ?

சென்னை, பூந்தமல்லி உயர்நீதி மன்றம் 1/2/2012  வியாழனன்று ஐந்து முஸ்லிம்களுக்கு ஆயுள்தண்டனையும் இரண்டு நபர்களை விடுவித்தும் ஒரு நபர் காணமல் போனதாகவும் அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.

முதலில் நீதிமன்றத்தில் இதற்கு முன் முஸ்லிம்கள் சம்பந்தப்படுத்தப் பட்ட வழக்குகளில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்...

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை ஆனார்.
அடுத்து தமுமுகவை தோற்றுவித்த அண்ணன் குணங்குடி அனிபா இவரும் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டு 11 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார்.
அந்த வரிசையில் தமுமுகவின் தலைவரை தற்சமயம் கைது செய்து சிறையில் 
அடைத்து உள்ளது.

வழக்கு விபரம்

குற்றவாளி எண் : 1 (முதல் எதிரி) ஹாரூன் இஸ்மாயில் நாகூர் 

குற்றவாளி எண் : 2 (இரண்டாவது எதிரி) ஜே.எஸ். ரிபாய் தமுமுக மாநில தலைவர் ,மேலப்பாளையம்

குற்றவாளி எண் : 3 (மூன்றாம் எதிரி) ஏ.பி. குத்புதீன் , நாகூர்

குற்றவாளி எண் : 4 (நான்காம் எதிரி ) ராஜா ஹுசைன், அல்-உம்மா, மதுரை ( விடுதலை )

குற்றவாளி எண் : 5 (ஐந்தாம் எதிரி) ஜாகிர் ஹுசைன் 

குற்றவாளி எண் : 6 (ஆறாம் எதிரி) ஜூபைர் , கோவை பாட்சா பாயின் உறவினர்

குற்றவாளி எண் : 7 (ஏழாம் எதிரி) அப்துல் அஜீஸ் , கோவை 

குற்றவாளி எண் : 8 (எட்டாம் எதிரி) அபு பக்கர் சித்திக் ( தலைமறைவு)

இதில் இரண்டு நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர் , மூன்று நபர்கள் சிறையில் இருப்பதாலும், ஜாமீனில் இருந்த ஜே.எஸ்.ரிபாய் , குத்புதீன் ஆகிய இருவரும் நீதிமன்ற வளாகத்திலே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் நாள் நாகூரில் இந்து முன்னணி 
பிரமுகர் முத்து கிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்ட பகவத் கீதை வடிவிலான பார்சல்  
வெடிகுண்டு அவரது மனைவி தங்கம் வாங்கி பிரித்த போது வெடித்து சிதறி உயிரிழந்தார். இதனை முன்னிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது ,முஸ்லிம் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டார்கள் ,முஸ்லிம்களின் பொருள்கள் சூறையாடப்பட்டன ,முஸ்லிம்களில் இருவர் இந்துத்துவவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர் ,அன்றைய நாகூர் காவல் ஆய்வாளராக இருந்த இந்திரஜித் முன்னிலையிலேயே இவைகள் நடந்தன. முத்துகிருஷ்ணன் முஸ்லிம்களுக்கு அதிக தொந்தரவு கொடுத்து வந்ததால் இந்த பார்சல் குண்டு அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டது,

குண்டு வெடிப்பு நடந்தபோது முத்துகிருஷ்ணன் அங்கு இல்லாததால் முஸ்லிம்களை சிக்க வைத்து கலவரத்தை ஏற்படுத்த அவரே ஏன் இதை செய்திருக்கக்கூடாது என்றும் அன்றைக்கு பேசப்பட்டது குண்டு வெடிப்பில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் சூழலில் சம்பந்தமே இல்லாத ஜாமியா புஸ்ரா இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் முதல்வர் ஜே.எஸ்.ரிபாய் இதில் எப்படி சம்பந்தப்படுத்தப் பட்டுள்ளார் என்பதை பார்போம் .

தீர்ப்பு விபரத்தை கேட்டால் வேடிக்கையாக இருக்கும் :

சாட்சிகள் இல்லை யூகத்தின் அடிப்படையிலும் காவல்துறையின் ஜோடிக்கப்பட்ட இந்து முன்னணியின் சாட்சியை வைத்துக்கொண்டு இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது.

sc;307.sc 302;sc 120[B] ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டணை வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில்120[B] கீழ் வருடங்கள் சிறை தண்டனையும்.
மயிலாடுதுறை ஜெகவீரபாண்டியனுக்கு அனுப்பியதற்கு கூட்டுசதிக்கு வருடம்
வெடிகுண்டு வைத்து தங்கத்தை(நாகூர் முத்துகிருஷ்ணன் மனைவி ) கொலை செய்ததற்கு sc 302; 10வருடம் ,
sc 307 அபாயகரமான மற்றும் வெடிமருந்து சட்டதிலும் இந்திய சட்டம் 10 வருடம்
மொத்தம் 34 வருடம் அதிக பட்சதண்டனை ஆயுள்தண்டனை வழங்கி வணங்காமுடி என்ற நீதிபதி தீர்ப்பளித்தார் .

இந்த தீர்ப்பின் மூலம் தனது சுயரூபத்தை வெளிபடுத்தியுள்ளார் இந்த காவி நீதிபதி.

வழக்கின் பின்னணி
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி நாகூரை சேர்ந்த இந்து 
முன்னணி முத்து கிருஷ்ணனுக்கும் மயிலாடுதுறை சேர்ந்த முன்னால் BJP MLA ஜெகவீர பாண்டியனுக்கும் தஞ்சாவூரிலிருந்து ஒரு தந்தி வருகிறது இருவருக்கும் அதில் நாளை 3ம் தேதி காலை 10மணிக்கு நேரில் சந்திக்கிறேன் அவசரம் என்று குறிப்பிட்டு இருந்தது. மறுநாள் 3ம் தேதி முத்து கிருஷ்ணனுக்கு நாகையில் கோர்டில் வழக்கு இருந்ததால் சென்றுவிட்டார்.சிறிது நேரத்தில் அவருக்கு உங்கள் மனைவி பார்சல் மூலம் வந்த வெடிகுண்டு வெடித்து இறந்து விட்டார் என்ற செய்தி வர உடனடியாக போய் பார்க்கிறார் இதற்கிடையில் மயிலாடுதுறைக்கு வந்த பார்சலை தபால்காரர் ஜெகவீர பாண்டியன் அலுவலகத்தில் இல்லாததால் தபால் நிலையத்தில் வைத்து விடுகிறார். நாகை சென்ற ஜெகவீர பாண்டியனுக்கு இந்த தகவலை தபால்காரர் தெரிவிக்கிறார் தபால்காரரிடம் உண்மை தெரிவிக்க படுகிறது தபால்காரர் காவல்நிலையத்தில் புகார் செய்ததால் வெடி விபத்து தவிர்க்க படுகிறது.

இதில் ஜே.எஸ்.ரிபாய்க்கு என்ன தொடர்பு என்று பார்ப்போம்.
முதல் எதிரி ஹாரூன் இஸ்மாயில் காரைக்காலில் அவர் நண்பர் வீட்டில் தங்கி இருந்த
 போது அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி தாகிரா பானு இவர்கள் தங்கி இருந்த 
ரூமில் வந்து சில பொருட்களை எடுக்க எத்தனித்துள்ளார். அப்பொழுது ஒருபொருளை 
தொட எத்ததனிக்கும் போது தொடர்தீர்கள் தொட்டால் வெடித்து விடும் என்று ஹாரூன் இஸ்மாயில் கூறி இருக்கிறார்.

இந்த சாட்சியைத் தான் முக்கிய சாட்சியாக எடுத்துள்ளது காவல்துறை. ஆனால் தாகிராவோ சாட்சி கூறும் போது ஹாருன் இஸ்மாயில் மட்டும் தான் இருந்தார் மற்றபடி அவரை பார்க்க வரும் நபர்கள் யார் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.

இதில் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் :

தாகிரா கூறியதை பார்சல் வெடிகுண்டு என்று எப்படி கூற முடியும் ? காரணம் பார்சலை யாரும் தொடாமல் அனுப்ப முடியாது .

நேரில் பார்த்த சாட்சிகள் ஏதுவும் கிடையாது ?

காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து முன்னணியினர் சாட்சியை எப்படி ஏற்று கொண்டது நீதி மன்றம் ?

இந்த வழக்கில் ஜே.எஸ். ரிபாய் எப்படி இதில் சம்பந்த பட்டார் என்பதை கூறும்போது 
ஹாருன் இஸ்மாயில் TVS 50 வைத்து இருந்தாராம் அது யாருடையது என்று கேட்கும்போது காரைக்கால் ஜாமியா புஸ்ரா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் முதல்வராக இருக்கும் ஜே.எஸ்.ரிபாயின் வாகனம் என்று கூறியுள்ளார் . இது தவிர இந்த சம்பவத்தில் ரிபாய்க்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று காவல்துறை அறிக்கையிலும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது , நேரடி சாட்சி இல்லாமல் இவரை சம்பந்தப்படுத்துவதற்கு என்ன காரணம் ?

யூகத்தின் அடிப்படையில் தண்டனை கொடுத்துள்ளது சரியா ?

முதல் நாள் தந்தி அனுப்பியது யார் - இதை ஏன் ஆராயவில்லை நீதித்துறை ? 

வெடிகுண்டு எங்கே யாரால் தயார்செய்யப்பட்டது ?
எங்கிருந்து அனுப்பப்பட்டது அனுப்பியவர் யார் ?- இதை ஏன் ஆராயவில்லை என்பன
போன்ற என்பன போன்ற மேலும் பல என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. தமிழக காவல்துறையும் நீதித்துறையும் எப்படி பதில் சொல்லப்போகின்றன 

இந்த தீர்ப்பு வந்த பிறகு பார்சல் வெடிகுண்டு வந்த இன்னொரு நபரான மயிலாடுதுறை ஜெகவீரபாண்டியனை நேரில் சென்று சந்தித்து இது சம்பந்தமாக அவரிடம் கேள்வி எழுப்பினோம். அவர் தெளிவாக காலையில் தினத்தந்தி நாளிதழ் பார்த்தேன் அதில் தான் தெரிந்து கொண்டேன் ஆனால் சாட்சியே இல்லாத இந்த வழக்கிற்கு இவ்வளவு தண்டனையா மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று கூறினர் மேலும் இது மேல்முறையீடு செய்தால் இந்த வழக்கு ஒன்றும் இல்லாததால் புஸ்வாணமாகிவிடும் என்றார். இதிலிருந்து இஸ்லாமியர் கற்க வேண்டிய பாடம் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை காவல்துறை பத்திரிக்கை துறை மட்டுமல்லாமல் நீதி துறையும் காவி மயமானது நினைத்து வேதனையாக உள்ளது.

நாம் அனைவரும் ஒன்று இணைந்து சிறு தவறும் செய்யாத அப்பாவிகளை இந்த பொய் வழக்கில் இருந்து விடு பட துவாக்கள் செய்தும்நீதிமன்றம் உணரும் வகையில் குறிப்பாக நீதித்துறையில் உள்ள காவி சிந்தனை உள்ள நீதிபதிகளுக்கு  உணர்த்துவோம். இனியாவது ஒன்று சேர்வோம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது த.மு மு க வைப் பொருத்தவரை சட்டரீதியாக உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை சந்திப்போம் என்றனர். நாமும் நீதி கிடைக்க துவா செய்வோம்.

---- முத்துப்பேட்டை முஹைதீன்.
http://www.tmmk-ksa.com/content/news/News_Item.asp?content_ID=1672




No comments: