Friday, August 10, 2012

இன்று ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு நடப்பது என்ன?- 2


யார் இந்தக் கொமைனீ

அடுத்ததாக கொமைனீயைப் பற்றி கொஞ்சம் அலசுவோம். கொமைனீ என்பவன் ஒரு காபிர் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கக்கூடாது. இதற்கு அவனுடை நூற்களான ‘கஷ்புல் அஸ்ரர், தஹ்ரீருல் வஸீலா, ஹுகூமத்துல் இஸ்லாமியா’ போன்றவைகளே சான்றாகவுள்ளன.

ஷீஆக்கள் என்போர் யார்?

அலீ (ரழி) அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் முஸ்லிம்களில் அநேகர் அநியாயம் செய்து விட்டதாகவும், ஸஹாபாக்கள் அநீதியிழைத்து விட்டதாகவும், நபியவர்களுக்குப்பின்னால் அலீ அவர்களுக்கே ஆட்சியைக் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் கொடுக்கவில்லையென்றும், அபூபக்கர், உமர், உஸ்மான் போன்றோர் அதைத் தட்டிப் பறித்துக்கொண்டதாகவும், அஹ்லுஸ்ஸுன்னாவினர் அஹ்லுல் பைத்தினருக்கு எதிரானவர்கள் நாமே அஹ்லுல் பைத்தினருக்கு சார்பானவர்கள் என்றும்  ஷீஆக்கள் அன்று முதல் இன்று வரை கூறி வருகின்றனர்.

   1.யூதனாக இருந்து முஸ்லிமாக நடித்த அப்துல்லாஹ் இப்னு ஸபஃ

இந்த சிந்தனை உருவாகி முஸ்லிம்களுக்குள் பிளவு விளையக் காரணமானவன் யமன் பிரதேசத்திலிருந்து வந்த அப்துல்லாஹிப்னு ஸபஃ எனும் ஒரு யூதன். இவன் இஸ்லாத்தைத் தழுவி தன்னை ஒரு முஸ்லிமாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றான். தன்னிடமிருந்த யூதக் கொள்கைகள் அனைத்தையும் மக்களிடையே இஸ்லாமியப்; போர்வையில் நுழைக்கிறான். ஓவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு வஸீ வேண்டும் ஒவ்வொரு நபியும் தனக்குப்பின்னால் ஒருவரை நியமித்து விட்டுச் சென்றுள்ளார். மூஸாவுக்கு வஸீ யூஷஃ .  எனவே முஹம்மதுக்கும் அவ்வாறு ஒருவர் இருக்க வேண்டுமே மகனில்லாது விட்டாலும் மறுமகனையாவது நியமித்திருக்க வேண்டுமே என்று சொல்லி பலவீனர்களையெல்லாம் தன் கொள்கையின் பால் ஈர்த்துக்கொள்கின்றான். உஸ்மான் (ரழி) அவர்களின் காலத்திலேயே இவன் இந்தப் பிரசாரத்தை மேற்கொண்டான.; அதில் அவன் வெற்றியும் கண்டான். உஸ்மான் (ரழி) அவர்கள் இயல்பிலேயே மென்மை சுபாவமுடையவர் என்பதாலும் இஸ்லாமிய ஆட்சி பரந்துவிரிந்திருந்ததாலும் இந்;த நிலைமைகளைப் பயன்படுத்தி இவன்தனது விஷக்கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றான். ஆயிஷா (ரழி), அலீ (ரழி), ஸுபைர் (ரழி), தல்ஹா (ரழி) போன்றோர் உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்கnதிரகவுள்ளதாக அவர்கள் எழுதுவதைப் போன்றே கடிதங்ககளை எழுதி தூரப்பிரதேசங்களுக்கெல்லாம் அனுப்புகின்றான். விவரமறியாத தூரதேச மக்கள் இவற்றை நம்புகின்றார்கள். நபித்தோழர்களெல்லாம் உஸ்மான் (ரழி) அவர்கள் மீது வெறுப்போடுதான்; உள்ளார்கள் என்றும் தவறாக விளங்குகின்றார்கள். எனவே ஆட்சி அலிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே இதன் மூலம் இந்த யூதன் வளர்க்கின்றான். உஸ்மான் (ரழி) அவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்கள் எதிர்க்கின்றார்கள். அப்போது மஸ்ரூக் அவர்கள் ‘நீங்கள் என்ன இதை எதிர்க்கின்றீர்கள்? நீங்கள்தானே இது விடயமாகக்; கடிதமெழுதினீர்கள்’ என்று கேட்கின்றார். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் ‘எவனை முஃமின்கள் நம்பிக்கை கொண்டு காபிர்கள் நிராகித்தார்களோ அவன் மீது ஆணையாக நான் இவ்விடம் வரும்வரை அப்படியொன்றை எழுதவில்லை’ என்று சொல்கிறார்கள். எந்தளவுக்கு இவ்வாறான கள்ளக் கடிதங்கள் புழங்கியதென்றால் உஸ்மான் (ரழி) அவர்கள் எழுதியது போன்று அவருக்குத் தெரியாமலேயே கடிதங்கள் எழுதப்பட்டன. இவ்வாறான சூழ்ச்சிகள் மூலம் உஸ்மான் (ரழி) அவர்களுக் கெதிராக மக்களைத்திரளவைத்து, அதே மக்களையே அவர்களை கொலை செய்ய வைத்து, பின்னர் அலீ (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் அவருக்குப் பக்கபலமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி…… ஓர் அசிங்கமான அத்தியாயத்தை இந்த யூதனும், அவனது கூலிப்படையினரும் வரலாற்றில் பதிய வைத்தனர். இவர்களின் இந்த அத்துமீறல்களைச் சகிக்க முடியாமல் அலீ (ரழி) அவர்கள் இவர்களை கொன்றொழிக்கவும் செய்தார்கள். இத்தகைய கயவர்களே இந்த வழிகெட்ட ஷீஆப்பிரிவினராகும். அன்று முதல் இன்று வரை இந்த அநியாயங்களை அவர்கள் செய்து கொண்டேயிருக்கின்றனர். முஸ்லிம்களைக் கேவலப்படுத்த வேண்டும், அழிக்க வேண்டும் என்பதே யூதர்களின் இலக்காகும். அதற்காகத்தான் ஆஷூரா பத்தாம் நாள் விழா போன்ற வழிகேடுளையெல்லாம் அறிமுகம் செய்தனர்.

  2.ஷீயாக்களின் இமாமியாக் கோட்பாடு

இந்த ஷீஆக்களிடத்தில் காணப்படும் இன்னொரு கொள்கைதான் இமாமியாக் கோட்பாடு எனப்படுகின்ற பனிரெண்டு இமாம்கள் பற்றிய கொள்கையாகும். பதினொறு இமாம்கள் மரணித்து விட்டதாகவும் இன்னும் ஒரேயொருவர் வரவிருப்பதாகவும் அவர்தான் அல் காயிம் பில்லா எனப்படுகின்ற மஹ்தியென்றும் அவரை அல்லாஹ் ஹீப்ரு மொழியில்தான் அழைப்பான். அவர்தான் தாவூதின் குடும்பத்தாரின் சட்டங்களையே நடைமுறைப்படுத்துவார். புதிய வேதத்தையும், புதிய சட்டத்தையும் இவ்வுலகில் நடைமுறைப்படுத்துவார். மக்காவையும் மதீனாவையும் உடைப்பார். 90 வீதமான அரபிகளைக் கொலை செய்வார். அவரைப் பார்த்து மக்கள் ‘இவர் முஹம்மதின் குலத்தவரல்ல. அப்படியிருந்தால் இவர் இந்த அரபிகளுக்கு இரக்கம் காட்டியிருப்பார்’ எனக் கூறுவர்….’  என்றல்லாம் இவர்கள் எழுதி வைத்துள்ளனர்.

அண்மையில் ஈராக்கின் நஜ்ப் பகுதியில் ‘அதிகமாகக் கொல்லையடியுங்கள் விபச்சாரம் செய்யுங்கள் ஏனென்றால் பித்னாக்கள் அதிகரிக்கும் போதுதான் மஹ்தி வருவார்’ என்று அறிக்கை விட்டார்கள். ஸிர்தாப் ஸாமுர்ரா எனும் இடத்தில் மஹ்தி வரவிருப்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய படுமோசமானவர்களே நம்பிக்கைகளை ஷீயாக்களின்; நூல்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

   3.முஸ்லிம்களின் படுகொலைக்குக் காரணமான ஷீயாக்கள்

இவர்களால் விளைந்த மற்றொரு இரத்தக்கரை படிந்த வரலாறொன்றுள்ளது. ஹி 600  களில் அப்பாஸிய ஆட்சி நிலவிய போது முஸ்தன்ஸிர் என்பவருக்குப்பின்னால் முஸ்தஃஸிம் என்பவர் ஆட்சிக்கு வந்து ஆளும் போது அவருக்கு இப்னுல் அல்கமீ, அபூ நுஸைர் அத்தூஸி என்ற இரு அமைச்சர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஷீஆக்களாவர். தாத்தாரியர்களுடன் கடுமையான யுத்தம் மூண்டிருந்த அக்காலப் பகுததியில் இப்னுல் அல்கமீ தாத்தாரிய மன்னன் ஹோலாகூவுக்கு ‘நீ பக்தாதுக்கு வா நானுனக்குதவுகின்றேன்’ என்று கடிதம் அனுப்புகின்றார். அதற்கு தாத்தாரிய மன்னன் ஹோலாகூ ‘எவ்வாறு நான் உன்னை நம்புவது, உன்னை நான் நம்ப வேண்டுமானால் ஒரு லட்சம் பேர்கொண்ட படையை குறைத்து விடு?’ என்று பதில் எழுதுகின்றான். இதைக்கேட்டு படையைக் குறைப்பதற்கு இப்னுல் அல்கமீ கலீபாவுக்கு ஆலோசனை கூறுகின்றான். அதற்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் படை  குறைக்கப்படுகின்றது. இறுதியாகப் பத்தாயிரம் படை மட்டுமே எஞ்சியிருக்கும் போது இப்னுல் அல்கமீ ஹோலாகூவுக்கு தகவல் அனுப்புகின்றான் அதற்கேற்ப தாத்தாரியப் படை  வந்தது அப்போது கலீபாவிடம் இந்த இப்னுல் அல்கமீ ‘தாத்தாரியப் படை  வந்து விட்டது நாம் ஒரேயடியாக அவர்களோடு யுத்தம் செய்யாமல் சமாதனம் செய்து பார்ப்போம்’ என்று கூறி தாத்தாரியப் படையிடம் சென்று பேரம் பேசவிட்டுத்திரும்பி வருகின்றான். கலீபாவிடம் வந்து ‘தாத்தாரிய மன்னர் ஹோலாகூ தனது மகளை உங்கள் மகன் அபூபக்கருக்கு மனம் முடித்துத் தர விரும்புகின்றாh’; என்று கூறுகின்றான்  கலீபாவும் இதை நம்பி  600 நீதிபதிகள், அறிஞர்கள் மற்றும் தனது குடும்பத்தாருடன் அவ்விடத்துக்குப் போனதும் மன்னரின் குடும்பம் உற்பட அனைவரும் இந்த சதியின் மூலம் படுகொலை செய்யப்படுகின்றனர். மன்னரை மட்டும் விட்டுவிடலாம் என்று ஹோலாகூ நினைத்த போது அவரைக்கொல்லத்தான் வேண்டும் என்று இப்னுல் அல்கமீ பிடியாய் நிற்கின்றான். அதன்படி மன்னர் கொல்லப்பட்டார். அதன்பின் பக்தாதிலிருந்த அஹ்ல{ஸ்ஸுன்னாவினர் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட இரத்த வராலாற்றுக்குக்காரணமானவர்களே இந்த ஷீஆக்கள்தான் என்பதை நாம் விளங்க வேண்டும்.இப்னுல் அல்கமீ, அபூ நுஸைர் அத்தூஸி போன்றோரை நாம் இழந்து விட்டோம் என்று கொமைனீ தனது ஹுகூமத்துல் இஸ்லாமியா என்ற நூலில் 127ம் பக்கத்தில் பாராட்டி எழுதியுள்ளான்

   4.இன்றைய ஈரானில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு எதிரான ஷீயாக்களின் அடக்குமுறைகள்

இதே கொலைவெறியாட்டம் இன்றும் ஈரானில் நடைபெற்றுக்கொண்டுதானிருக்கின்றன. அவ்வாறு கொல்லப் பட்டவர்களின் விவரங்களைத் தருகின்றோம்.

1- 1986ல் கப்ருகளை இழிவுபடுத்தினார் என்ற பேரில் பஹ்மன் ஸுகூர் எனும் அறிஞர் கொல்லப்பட்டார்.

2- 1990ல் அப்துல் வஹாப் அல் ஹவாபி என்பவர் கொல்லப்பட்டார். இதேயாண்டில் குராஸானைச் சேர்ந்த குத்ரதுல்லா ஜஃபரீ என்பவர் கொல்லப்பட்டார்.

3- குர்திஸ்தானில் தனியாக ஓர் இஸ்லாமிய அமைப்பை வழிநடாத்திவந்த அஷ்ஷேக்; நாஸிர் அஸ்ஸுப்ஹானி என்பவர் கொல்லப்பட்டார்.

4- வைத்தியத்தில் தேர்ந்திருந்த அலீ முழபப்பரியான் என்பவர் 1992ல் கொல்லப்பட்டார்.

5- ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கென மத்ரஸாவொன்றை நடாத்தி வந்த முஹம்மத் ஸாலிஹ் அழ்ழியாஈ என்பவரிடம் வஹாபிஸத்தைப் பரப்புவதாக குறித்த மத்ரஸாவை மூடுமாறு வேண்டப்படுகிறது அவர் ‘நீங்கள் வேண்டுமானால் அதை மூடுங்கள் நானோ மூடமாட்டேன்’ என்று மறுக்கின்றார். பின்னர் உடன்பட்டு மத்ரஸாவை மூடுகின்றார். அவரை கண்டம் துண்டமாக வெட்டிச் சாய்த்து விட்டு வீதிவிபத்தொன்றில் இறந்து போனதாய் அறிவித்தார்கள்.

6- பைர்ஜன்த் எனும் இடத்தில் பள்ளியில் இமாமாகவிருந்த மௌலவீ அப்துல் அஸீஸ் அல்லுவியானீ 1994ல் கொல்லப்பட்டார்.

7- மௌலவீ அப்துல் மிக் முல்லா தாதா என்பவர் கொல்லப்பட்டார்.

8- அப்துந்நாஸிர் ஜெம்ஸீத்  என்பவர் கொல்லப்பட்டார்.

9- ஷேக்; முல்லா  என்பவர் கொல்லப்பட்டார்.

10- உஸ்தாத் பாரூக் புருஸாத் என்பவர் கொல்லப்பட்டார்.

11- கலாநிதி அப்துல் அஸீஸ் அல் காலிமி என்பவர் கொல்லப்பட்டார்.

12- மௌலவீ யார் முஹம்மத் அல் கஹ்ஸாஈ, மௌலவீ அப்துஸ்ஸத்தார், ஷேக்; நூருத்தீன் அல் குறைபீ, அப்துல் ஜப்பார் நூர் முஹம்மத், ஸலாஹ் ஸகீ பின் ஹுஸைன், அன்வர் அல் முபாரகீ, மூஸா அல் கர்மீ, ஷம்ஸுத்தீன் அல் கியானீ போன்றோர் கொடூராமாகக் கொல்லப்பட்டோருள் சிலராகும். இவைகளில் பல அஹ்மத் நஜாதீ ஆட்சிக்காலத்;தில் நடந்தவை.

இத்தகைய வெறியாட்டமாடும் ஈரானைப்பார்த்து அஹ்மத் நஜாதீ இஸ்லாமியப் புரட்சி செய்வதாகக் கூறுகிறார்கள். இந்த ஷீஆக்களுக்கு மக்கா புனிதத்தளமல்ல.  கர்பலாவே புனிதத்தளமாகும். இதனால்தான் ஹஜ் காலங்களைப் பார்த்து பெரும் கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்கள். புலூஸிஸ்தானிலுள்ள மிகப்பிரபலமான மஸ்ஜிதுல் பைழுல் கபீர், மக்கீ ஆகிய 200 வருடப்பழைமை வாய்ந்த இரு பள்ளிகளில் ஒன்றை மூடச்சொல்லி அரச உத்தரவு மூன்று முறை வரவே அதற்கு அங்குள்ள அறிஞர்கள் மறுத்த போது புல்டோஸர்கள் மூலம் பள்ளி தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சம்பவம் முழு ஈரானையும் கவலையில் ஆழ்த்தியது. இத்தகைய படுபாதகங்களையெல்லாம் புரியும் இந்த நாட்டைப் பார்த்து ‘முஸ்லிம்நாடு இஸ்லாமிய ஆட்சியென்று சொல்லலாமா?????

   5.முத்ஆ எனும் உத்தியோகபூர்வ விபச்சாரம்

ஷீஆக்களிடம் காணப்படும் மற்றொரு கொள்கையே முத்ஆத் திருமணமுறையகும். இது ஒரு சட்டபூர்வ விபச்சாரமாகும். ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்துக்கு வைத்துக் கொள்வதே இதுவாகும். இதனால் உருவாகும் வாரிசுக்கு சொத்துப் பங்கோ, எதுவும் கிடையாது. இந்த விபச்சார முறை ஈரானில் மலிந்து காணப்படுகின்றது. இதை அவர்களின் நூல்களிலேயே எழுதியுள்ளார்கள்.

ஸதூக் என்பவர் ‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| என்ற நுலில் 3ம் பாகம் 366ம் பக்கத்தில் ‘யார் ஒரு முஃமினான பெண்ணுடன் முத்ஆ முறையில் உறவு வைக்கின்றாரோ அவர் கஃபாவை எழுபது முறை தவாப் செய்தவரைப் போன்றவராவார்’(இது கஃபாவை கண்ணியப்படு;த்துகிறதா!) எனக் கூறுகின்றார்.

‘முத்ஆ என்பது எனது முன்னோரினதும், எனதும் மார்க்கமாகும். யார் அதைச் செய்தாரோ அவர் நம் மார்க்கத்தையே செய்தார். யாhர் அதை மறுத்தாரோ அவர் நமது மார்க்கத்தையே மறுத்தார்’ என்று ஜ.பர் அஸ்ஸாதிக் சொன்னதாக எழுதி வைத்துள்ளார்கள்.

‘அபூ அப்துல்லா (அலை) என்பவர் அவர்களிடம் ஜஃபர் அஸ்ஸாதிகிடம் வந்து ‘முத்ஆவுக்கு அல்லாஹ்விடம் கூலியுண்டா என்று கேட்டார் அதற்கவர் ‘அதன் மூலம் (முத்ஆவின் மூலம்) அல்லாஹ்வின் முகத்தை அவர் நாடியிருந்தால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுவான். அப்பெண்ணுக்கு அருகில் அவர் சென்றால் ஒரு பாவத்தை அல்லாஹ் மன்னிப்பான். அப்பெண்ணோடு சேர்ந்து விட்டு அவர் குளித்தால் அவரின் முடியிலிருந்து வடியும் ஒவ்வொரு துளிக்கும் அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னிப்பான்..’ இவையனைத்தும் ஸதூக் என்பவரின் ‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| என்ற நுலில் 3ம் பாகம் 366ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.

‘முத்ஆ செய்பவர் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தப்புவார். யார் இரு தடவை முத்ஆ செய்தாரோ அவர் நல்லவர்களோடு எழுப்பப்படுவார். யார் மூன்று முறை முத்ஆ செய்தாரோ அவர் என்னோடு நெருக்கமாயிருப்பார்’ (‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| 3ம் பாகம் 366ம் பக்கம்) என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்கள்.

‘உங்களுக்கு முன் சென்றவர்கள் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்காமல் இலகுவாக சுவனம் நுழையாலாமென்று நீங்கள் நினைக்கின்றீர்களா’ என்று அல்லாஹ் கேட்கின்றான் ஆனால் இவர்களோ முத்ஆ செய்துவிட்டால் இலகுவாகச் சுவனம் சென்றிடலாம் என்கின்றார்கள்.

ஷாஹுடைய ஆட்சியை ஒழிக்க வந்த தற்போதைய ஆட்சி பிரகடனப்படுத்திய இந்த முத்ஆ முறையால் தந்தையைத் தெரியாத ஐந்து இலட்சம் சிறார்கள் ஈரானிலிருப்பதாக அண்மையில் வெளியான அறிக்கையொன்று கூறுகிறது. லெபனானிலிருந்து வெளியாகும் ஷீஆக்களின் சஞ்சிகையான ஷிராஃ என்ற சஞ்சிகையின் 684வது இதழில் இவ்வறிக்கை வெளியாகியது.

எந்தளவுக்கு முத்ஆவை இவர்கள் ஆதரிக்கின்றார்கள் என்றால் கொமைனீ தனது கஷ்புல் அஸ்ரார் 2-292 என்ற நூலில் ‘முத்ஆ செய்வது குழந்தையுடனாக இருந்தால் அதனோடு  உறவு வைத்துக் கொள்ளாமல் உறவுக்கு முந்திய ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.

    6-ஷீயாக்களின் அவதூறுகள்

‘உமர் (ரழி) அவர்களுக்கு பிற்பகுதியில் ஒரு நோய் இருந்ததாம் ஆண்களின் நீரால்தான் அது குணமாகுமாம்’ என்றெல்லாம் அவதூறுகளை நபித்தோழர்களின் பேரால் கட்டவிழ்த்து விட்ட யூத அடிவருடிகளே இந்த ஷீஆக்களாகும்.

‘நபியவர்கள் ஸெயினப்(ரழி) அவர்களின் வீட்டுக்குப் போனார்களாம் அவர் குளிப்பதைப் பார்த்து உன்னைப் படைத்தவன் தூய்மையானவனாகி விட்டான் என்று சொன்னார்களாம்.

 நபியவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களும் இருந்து கொண்டிருந்த போது அலீ;(ரழி) அவர்கள் வந்தார்களாம். ‘பின்னால் போய் அமரு’ என அலீயைப் பார்த்து நபியவர்கள் சொன்னார்களாம். அலீ அவர்கள் பின்னால் போய் அமர்ந்தார்களாம். அது ஆயிஷாவின் மடியாக இருந்ததாம். உடனே ஆயிஷா அலீயைப் பார்த்து ‘எனது மடிதானா உனக்குக் கிடைத்தது?’ என்றார்களாம் அதற்கு நபியவர்கள் ஆயிஷாவைப் பார்த்து ‘சும்மா இரு’ என்றார்களாம் என்று நபியவர்கள் மீதே பொய்யுரைத்த பொய்யர்களே இவர்கள்.

‘ஒரு கல்லைப் பார்த்து கடவுள் என்று வணங்குவதே தவறாகும். அவ்வாறல்லாமல் கடவுளிடம் துணை தேடும் என வணங்கினால் அதில் தவறில்லை’ என்று தஹ்ரீருல் வஸீலா என்ற நூலில் கொமைனீ கூறுகின்றான். உமர் (ரழி) அவர்களைக் கொலை செய்த ஈரானைச்சேர்ந்த இப்னுல் முல்ஜிமுக்கு கப்ர் கட்டி வணங்குகின்றார்கள். கொமைனீயின் கல்லறை தங்கத்தால் பூசப்பட்டு அதைச் சுற்றித் தவாப் செய்கின்றார்கள். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் தெஹ்ரானில் வணக்கத்தளமுள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்கு ஒரேயொரு பள்ளியேனும் இல்லை. இத்தகையவர்களையா இவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்கள்? என்கின்றார்கள்??????????

அமெரிக்காவின் பின்னணியில் ஈராக்கில் வன்முறை ஏற்படுத்தப்பட்டு சதாம் தூக்கிலப்பட்ட போது முழு உலகும் சோகத்திலிருந்து போது அதைக் கொண்டாடிய வஞ்சகர்கள் யார்? இந்த ஷீஆக்களே! இதை, இஸ்லாமி ஆட்சி பற்றிப் பேசும் எந்த பத்திரிகையும் கண்டிக்க வில்லை. அமெரிக்காவுக்கு இடம் கொடுத்ததற்காக சவுதியை வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கும் இவர்களுக்கு இது தெரியவில்லையோ????????????????

வழிகேடுகளின் தொகுப்புக்களாகவுள்ள ஷீஆக்களின் புத்தகங்கள் இவர்களிடமில்லையா??? இருக்கின்றனவென்றால் ஷீஆக்கள் வழிகெட்டவர்கள்தான் என்பதை ஆதாரத்துடன் இவர்கள் எழுதுவார்களா??? எழுதமாட்டார்கள். ஏனென்றால் ஈரானிலிருந்து வெளியாகும் சீடிக்களையெல்லாம் இவர்கள்தானே சந்தைப்படுத்துபவர்;கள்? அதனால் ஈரானுக்கு எதிராக எழுதவும், பேசவும் இவர்களால் முடியாது. அதற்காக நாம் இவர்களை ஷீஆக்கள் என்று கூறவில்லை அவர்களுக்கு ஆதாரவானவர்கள் என்றுதான் சொல்கின்றோம். ஷீஆக்கள் பற்றியும் ஈரானில் நடைபெறுவன பற்றியும் நாம் எழுதியுள்ள இவையனைத்தும் ஆதாரபூர்வமானவையாகும் எவ்விடத்திலும் இதை நிரூபிக்க தயாராகவே நாம் உள்ளோம். யார் ஆட்சிபீடமேறினாலும் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்த இஹ்வான்கள் இன்றைக்கு அரசியலரங்கில் கால் வைத்து கிளர்ச்சியைக் கைவிட்டதற்குக் காரணமென்னவென்றால் கிளர்ச்சி செய்த காரணத்துக்காக ஸைய்யித் குத்ப் போன்ற தம் தலைமைகள் தூக்குமேடைக்குச் சென்றமைதான். எனவேதான் கிளர்ச்சி செய்தால் நமக்கும் இதே கதிதான் என்று தற்போது அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இவர்களின் கொள்கை தெளிவானதல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். போராட்டமே தீர்வென்று ஆயுதமேந்தியவர்கள் தமது அரசியல் போக்கில் ஒரு கிறிஸ்தவரையும் சேர்க்கின்ற அளவுக்கு இறங்கிவிட்டார்கள். இது பற்றிய அறிக்கையை அண்மையில் ஜோர்தானில் வெளியிட்டார்கள். இவர்களின் இஸ்லாமிய ஆட்சியானது கிறிஸ்தவத்தையும் சேர்த்து நடை முறைப்படுத்துமளவுக்குச் சென்று விட்டது. இஸ்லாமிய ஆட்சிதான் தமது இலக்கு என்பதால் பித்அத், ஸுன்னத் எதையும் இவர்கள் பார்ப்பதில்லை. இதனால்தான் ஹஸனுல் பன்னாவின் 100வது பிறந்த நாளை சர்வதேச ரீதியாக அண்மையில் கொண்டாடினார்கள் இதைக் கொண்டாடுமுகமாக இலங்கையிலுள்ள சிலர் இருட்டில் அழுததாகவும் அறியக்கிடைத்தது. பிறந்த நாள் கொண்டாட்டம் இஸ்லாம் அனுமதித்த ஒன்றாயிருந்தால் முதலில் இவர்கள் நபியவர்களுக்கும், அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ போன்ற நபித்தோழர்களுக்குமல்லவா பிறந்த நாள் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஹஸனுல் பன்னாவை இவர்கள் முற்படுத்தக் காரணம் என்ன?????

ஹஸனுல் பன்னாவை மனிதர் என்பதற்கு மேலால் தூக்கி அவரை ஒரு புனிதராக இவர்கள் பார்க்கின்றார்கள் அதன் வெளிப்பாடுதான் இந்தக் கொண்டாட்டங்களாகும். ஆகவே இஸ்லாமிய ஆட்சியென்பது இஸ்லாம் சொல்லும் விதத்தில் இருக்க வேண்டும். ஷிர்க் கொடிகட்டிப் பறக்கும் போது ஆட்சிபற்றியும் சமூக அமைப்புப்பற்றியும் பேசுவதில் அர்த்தமில்லை. அல்லாஹ்வைப்பற்றிய சரியான நம்பிக்கையில்லாமல் உருவாகும் அனைத்தும் தோன்றிய மறுகனமே தடைப்பட்டுப் போகும். ஆகவே கொள்கையில் சீர்திருத்தம் வராமல் வேறு என்னதான் திட்டங்களை வகுத்தாலும் அதில் விளையப் போவது நஷ்டமே.

http://www.mujahidsrilanki.com/2011/10/what-is-happening-in-iran/ 

 

இன்று ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு நடப்பது என்ன?- 1


இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கiயிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் ‘அரபு நாடுகளைப் பாருங்கள்! கோழைகளாக இருக்கின்றன. அமெரிக்காவுக்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. அங்கு பன்றி இறைச்சி, விபச்சாரம், மதுபானங்கள் போன்ற அனைத்தும் மலிந்து விட்டனளூ அமெரிக்காவை எதிர்க்கத்திராணியற்று அரபு நாடுகள் கிடக்கின்றனளூ ஆனால் ஈரானைப்பாருங்கள்! அமெரிக்காவை எதிர்க்க கொமைனீ இருந்தார்… தற்போது நஜாதி வந்திருக்கின்றார்ளூ ஈரான் தற்போது அணுவாயுத பலத்தையும் பெற்று விட்டது……..இஸ்லாமியஆட்சியைப் பற்றி அடிக்கடி பேசுகின்றது…..’ என்று கூறுவதாகும். இஸ்லாமிய ஆட்சி பேசுவோர் மீது இவர்களுக்கிருந்த அபரிமிதமான அபிமானமானது, ‘யாராயினும் சரி, அவர் எக்கொள்கையாயினும் சரி, இஸ்லாமிய ஆட்சியைப் பேசினால் அவரை நாம் ஆதரிப்போம்’ என்ற நிலைக்கு இவர்களைத் தள்ளிவிட்டது எனலாம். அஹ்மத் நஜாதி ஈரானின் ஜனாதிபதியானதும் அல்ஹஸனாத் சஞ்சிகையானது அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து ‘இரும்பு மனிதர்’, ‘ஈரானில் அணுப்புரட்சி’, ‘இஸ்ரேலை உலகப்படத்திலிருந்து அகற்ற வேண்டும் என சூளுரைத்தவர்’ என்றெல்லாம் எழுதியது. அஹ்மத் நஜாதி யார்? அவரின் கொள்கை என்ன? பிடல் காஸ்ட்ரோவும் இப்படித்தானே சீறுகிறார்? இவ்வாறு ஒருவர் பேசினால் அது இஸ்லாமாகி விடுமா? என்பதையெல்லாம் இவர்கள் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்கவில்லை. ‘இமாம்கொமைனீ‘” என்று நாக்கூசாமல் பலரும் சர்வ சாதரனமாகப் பேசுவதை சமூகத்தில் காணலாம். இதுவும் அபரிமிதமான, தவறான இஸ்லாமிய ஆட்சி மோகத்தால் விளைந்த மிகப் பெரும் கேடுகளில் ஒன்றே.பொது மக்கள் கொமைனீயின் உரைகளையோ, புத்தகங்களையோ கேட்டிராது, படித்திராத போது எவ்வாறு இந்த கொமைனீ சமூகத்தில் ‘இமாம்’ கொமைனீயாக அறிமுகமானார்? அவரை நமக்கு அறிமுகஞ் செய்தது யார்? எந்த முஸ்லிம் நாட்டுத் தலைவர்களின் பெயர்களும் பரீட்சியமில்லாத பொது மக்களுக்கு இந்தப் பெயர் மாத்திரம் அறிமுகமானது எவ்வாறு?. ஈரானின் ஜனாதிபதி யார்? என்றால் ‘அஹ்மத் நஜாதி’ என்கிறோம். எனவே ஈரானில் ஆட்சி செய்த, செய்கின்ற இவர்களை இமாமாகவும், வீரமிகு ஜனாதிபதியாகவும் நமக்கு அறிமுகஞ் செய்தவர்கள் இஸ்லாமிய ஆட்சியை மொட்டைத்தனமாக விளங்கிய இவர்கள்தாம். அமெரிக்காவை எதிர்த்தார்கள் என்ற ஒரே காராணத்துக்காகத்தான் இவர்களை கதாபுருஷர்களாக நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். கழுகுப்புத்தியோடிருக்கும் ஷீஆக்கள், தம்மை ஆதரிக்கும் இது போன்ற குழுக்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும். இஸ்லாமியப் போர்வையிலிருக்கும் ஸியோனிஸ்டுகள் அல்லது யூதர்களே ஈரானிலிருக்கும் இந்த ஷீஆக்கள் என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க நாம் தயாராளளோம்.( இப்படிச் சொல்லும் போது ஈரானில் உள்ள அனைத்து சீயாப் பொது மக்களையும் நாம் இவ்வாறு சொல்வதாக கருதிவிடக் கூடாது. வழிகாட்டிகளையும் மேலிடத்தவர்களையுமே நாம் இவ்வாறு குறிப்பிடுகிறோம்) யூதர்களால் உருவாக்கப்பட்ட கூலிப்படைகளே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதற்கு அவர்களே சாட்சியாகவுமுள்ளனர்.
1980களில் ஈரானிலே ஷாஹ் மன்னரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. விபச்சாரம், கொல்லை என்ற பஞ்சமாபாதகங்கள் அனைத்தும் அப்போது தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன. அப்போதுதான் இவற்றுக்கெதிராக கொமைனீயின் தலைமையில் ஆன்மீக புரட்சியொன்று அங்கு அரங்கேறுகிறது. இதன்போது ‘ஷாஹ்வின் அராஜக ஆட்சியை ஒழிப்போம், இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவோம்’என்ற கோஷங்கள் முழங்கின. இதைப்பார்த்த இவர்கள் ‘ஆஹா இஸ்லாமிய ஆட்சியொன்று ஏற்படப் போகுது’ என்று எகிப்திலே அப்துந்நாஸர், அஹ்மத் நஜீப் போன்றோரை நம்பி இஹ்வானுல் முஸ்லிமூன் ஏமாந்ததைப் போன்று குமைனியிடம் இவர்கள் ஏமாந்தார்கள்.
இஸ்லாமிய ஆட்சிய பேசியோர் மீது இவர்களுக்கிருந்த அதீத பற்றுதல் காரணமாக இதே இஸ்லாமிய ஆட்சிப் படலத்தைப் பாடிய ஷீஆக்களுக்கு சார்பாக இவர்கள் என்னென்ன அறிக்களையெல்லாம் விட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் இங்கு தருகிறோம்.
1- இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் கருத்தைத் தாங்கி குவைத்திலிருந்து வெளியாகும்‘அல்முஜ்தமஃ’ (المجتمع) என்ற சஞ்சிகையில் 434வது இதழில் ஈரானியப் புரட்சி பற்றி 1979களில் கீழுள்ளவாறு எழுதப்பட்டிருந்தது:
‘இஹ்வானுல் முஸ்லிமூன் பொதுவான அரிக்கையொன்றை வெளியிடுகின்றது…. கொமைனீயைச் சந்திக்க நாம் உத்தேசித்துள்ளோம். இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி, இந்தோனேஸிய மாஸூமி, மலேசிய ஷபாபுல் இஸ்லாம் போன்ற இயக்கங்களை அழைக்கின்றோம்…..’
   ஈரானுக்கு சென்ற இவர்களுக்கு மத்தியில் கொமைனீ பேசும் போது ‘இது ஈரானின் புரட்சியல்ல, இது லாஇலாஹ இல்லல்லாஹ் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் புரட்சியாகும். இஸ்லாத்துக்கெதிராக அடக்கியாள்பவர்களுக்கெதிராக ஏற்பட்ட புரட்சியாகும். ஷாஹ்வுக்கு எதிராக வெற்றியைத்தந்த அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்த வெற்றயைத்தருவான்’ என்று சொல்கின்றார். உடனே இவர்கள் ‘நாம் எங்கள் உடல் ரீதியிலும், ஏனைய வழிகளிலும் உங்களுக்குதவ தயாராகவுள்ளோம்’என்று சொல்கிறார்கள். பின்னர் புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களுக்காக ஸலாத்துல் காயிப் தொழுகை தொழுததாக அந்த குறிப்புச் சொல்கின்றது.
   பின்னர் இவர்களுக்கு கொமைனீயின் நிறம் விளங்கி விட்டது . ‘ஈரான் இத்னா அஸரிய்யா கோட்பாட்டில்தான் ஆளப்படும். இதை யாராலும் மாற்ற முடியாது’ என கொமைனீ எழுதிய யாப்பு பற்றி பின்னரே இவர்களுக்குத் தெரிந்தது . அதன் பின்புதான் கொஞ்சம் இவர்கள் அடக்கி வாசிக்கலானார்கள்.
2- 1985களில் ‘மஜல்லதுத்தஃவா’ எனும் சஞ்சிகையில் 105 வது இதழில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான உமர் அத்தில்மிஸானீ என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:
‘இன்றுள்ள மார்க்க அறிஞர்களில் பொறுப்புக்களில் ஒன்றுதான் ஷீஆக்களையும், ஸுன்னிகளையும் சேர்த்து வைப்பதாகும்…. இந்தப் புரட்சிக்குப் பின்னால் இஹ்வானுல் மஸ்லிமூனுக்கும், ஷீஆக்களுக்குமிடையே தொடர்புகள் குறையவில்லை. ஆயத்துல்லா காஸானியோடு நாம் தொடர்பிலுள்ளோம். நவாப் ஸபவீயை எகிப்துக்கு விருந்தாளியாக நாம் அழைத்துள்ளோம். அவருடைய மத்ஹபைவிட்டு இங்கே வரவேண்டும் என்பதற்காக நாம் அவரை விருந்துக்கழைக்கவில்லை. பரஸ்பரம் அன்பு பரிமாறிக் கொள்வதற்காகவே நாம் அவரையழைத்தோம். இஸ்லாமிய மத்ஹபுகள்(அகீதாவிலுள்ள மத்ஹபுகள்) அனைத்தும் ஒன்றித்து செல்லவேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம்……ஷீஆ அறிஞர்களாயினும், ஸுன்னி அறிஞர்களாயினும் இந்த வேளையை அவர்கள் செய்யவில்லையென்றால் மார்க்கத்தை அவர்கள் சரியாக விளங்கவில்லை என்பதே அதன் அர்த்தமாகும்…….’ என்றவாறு அவருடை கருத்துக்கள் காணப்பட்டன.
அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொல்லுவதற்காக உருவாக்கப்பட்ட பிதாஇய்யா அல் இஸ்லாம் எனும் அமைப்பின் ஈராக்கைச் சேர்ந்த தலைவரே இந்த நவாப் ஸபவீ என்பவனாகும். அஹ்மத் கஸ்ரவீ எனும் ஷீஆ அறிஞர் ஷீஆ மத்ஹபை பிழையென்று விளங்கி அஹ்லுஸ்ஸுன்னாவின் பக்கம் வந்த போது அவரைக் கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்தவனையா விருந்துக்கு அழைப்பது?
3- ஈரானியப் புரட்சி வெடித்த அதே காலப்பகுதியில் குவைத்திலிருந்து வெளியான மஜல்லதுல் இத்திஹாத் என்ற சஞ்கிகையில் ஓர் அரிக்கை வெளியாகியது. ‘ஈரானின் புரட்சிக்கு உதவுமாறு குவைத் அரசிடம் நாம் வேண்டுகிறோம். ஈரானுக்கு எதிராக என்ன தடைகள் வந்தாலும் அந்நாட்டுக்கு குவைத் அரசு உதவ வேண்டும். ஏனென்றால் ஈரானின் வெற்றியானது குவைத்தின் வெற்றியாகும். அதன் தோல்வியானது குவைத்தின் தோல்வியாகும்……’ என்றவாறு அவ்வறிக்கை அமைந்திருந்தது.
4- ‘மௌஸுஅத்துல் ஹரகிய்யா’ எனும் நூலில் 289ம் பக்கத்தில்  நவாப் ஸபவீ யைப் பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார். ‘ஈமானும், நல்லுணர்வும் கொண்ட 29வயதுடைய ஒரு வாலிபர். இவரைப் போன்றே எல்லோரும் இவ்வுலகிலிருக்க வேண்டும்…..’அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறிபிடித்த ஷீஆவைப் பற்றி இவர் சொல்லும் பாராட்டு மழைதான் இது.
5- ஹஸனுல்பன்னாவுக்கு அடுத்த படியாக வந்தவரென்று இஹ்வான்கள் மதிக்கின்ற முஹம்மத் அல் கஸ்ஸாலி என்பவர் தனது ‘கைப நப்ஹமுல் இஸ்லாம்’ என்ற நூலில் 142ம் பக்கத்தில் அகீதா ரீதியாக இஸ்லாத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பற்றிச் சொல்லிவிட்டு ‘அல்லாஹ்வையும், நபியவர்களின் தூதுத்துவத்தையும் ஏற்றுள்ள நாம் ஏன் ஷீஆ, ஸுன்னி என்று சண்டை பிடித்துக் கொள்கிறோம். ஸுன்னிகளாகிய நமக்கும் ஷீஅக்களுக்கும் அகீதாவில் கருத்து வேறுபாடு ஏதுமில்லையே. அப்போது ஏன் நமக்குள் இந்த சச்சரவுகள்……..?’ என்று உலக விடயங்களெல்லாம் தெரிந்த இந்த கஸ்ஸாலி எழுதுகின்றார். ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் அகீதாவில் காணப்படும் முரண்பாடுகள் பற்றி இவருக்குத் தெரியாது போலும். அதே நூலில் 145ம் பக்கத்தில் தொடர்ந்தும் அவர் கூறும் போது ‘ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் எதைப்போன்றதென்றால் ஹனபீ, ஷாபிஈ, மாலிகீ மத்ஹபுகளுக்கிடையே பிக்ஹு ரீதியாகக் காணப்படும் வேறுபாடுகளைப் போன்றதே……’ என்று சொல்கிறார். அப்படியாயின் ஷீஅக்களை ஐந்தாம் மத்ஹபாகச் சொல்கின்றார்.
6- இதே முஹம்மத் அல் கஸ்ஸாலி ‘ழலாமுன் மினல் கர்ப்’ எனும் நூலில் 252ம் பக்கத்தில்‘இத்னா அஷரிய்யா மத்ஹப் தொடர்பாக ஒரு பாடத்தை நமது மாணவர்களுக்கு ஏன் நாம் கற்பிக்கக் கூடாது? ‘ என்று கூறியுள்ளார்.
7- அபுல் அஃலா மொளானா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1979 ஓகஸ்டில் வெளியான தஃவா எனும் சஞ்சிகையின் 19வது இதழில் ‘கொமைனீயின் புரட்சி ஓர் இஸ்லாமிய புரட்சியாகும். இஸலாமிய ஜமாஅத்துக்களே அதைச் செய்கின்றன. ஆகவே பொதுவாக அனைத்து முஸ்லிம்களும், குறிப்பாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அதற்காகப் போராட வேண்டும்….’ என்று அறிக்கை விடுகின்றார்.
8- சூடானிலிருந்து இஹ்வான்களால் வெளியிடப்படும் ஸபாஹுன் ஜதீத் என்ற சஞ்சிகையில் ‘கொமைனீக்கெதிராக சவுதியிலிருந்து மார்க்கத்தீர்ப்புச் சொல்லப்பட்டுள்ளது…. அரபுத்தீபகற்பத்திலிருக்கும் இவர்கள் ஏன் மார்க்கத்தின் பேரால் இத்தகைய தீர்ப்புக்களைச் சொல்கிறார்கள். இஸ்லாத்துக்கெதிராக இஸ்லாமா? இல்லை. இது ஜிஹாதிய இஸ்லாத்திற்கு எதிரான ஐந்து தூன்களையுடைய இஸ்லாம். கன்னியமிகு மார்க்கத்துக்கெதிராக வந்துள்ள ரியாழுடைய இஸ்லாம் அல்லாஹ்வின் படைக்கெதிரன அநியாயக்காரர்களின் இஸ்லாம். பிரான்ஸிருந்து வருகின்ற கோழி இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா என்ற இஸ்லாம்தான் இவர்களுக்குத் தெரியும் உண்மையான இஸ்லாம் தெரியது…...’ என்று அவ்வாக்கம் சொல்கின்றது. இஸ்லாமிய ஆட்சி என்று சொன்ன ஒரே காரணுத்துக்காக அஹ்லுஸ்ஸுன்னாவை நக்கலடித்து எழுதும் இவர்களின் வாசகங்களைப் பாருங்களேன்!
கொமைனீயின் வருகையின் பின்னர் ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கெதிராக பல்வேறு அராஜகங்கள் இடம் பெற்றுள்ளன. தஹ்ரான், புலூஷிஸ்தான் போன்ற அஹ்லுஸ்ஸுன்னாவினர் செரிந்து வாழும் பகுதிகளில் கொமைனீயின் வருகையின் பின்னர் ஒரு பள்ளிவாயில் கூட கட்டப்படவில்லை. ஏற்கனவே இருந்தவைகள் உடைக்கப்பட்டன. இதைப்போன்று அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பல அறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அவர்கள் பற்றிய விபரங்கள்  ஆதாரங்களுடன் உள்ளன. முஃதமீன் என்ற சிறையில் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கெதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெறுகின்றன. ராபிதது அஹ்லிஸ்ஸுன்னா பில் ஈரான் என்ற அமைப்புத்தான் ஈரானில் நடைபெறும் இந்தக் கொடுமைகளை வெளியுலகுக்கு வெளியிடுகின்றது. இவ்வளவும் தெரிந்த பின்பும்தான் இஹ்வானுல் முஸ்லிமூனைச் சேர்ந்த யூஸுப் நதா என்பவர் அல்ஜெஸீராவுக்கு ‘ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கும் ஷீஅக்களுக்குமிடையில் எந்தப் பிரச்சிணையுமில்லை’ என்று பேட்டியளிக்கின்றார். ஈரானிய ஸுன்னாவைச் சேர்ந்த அறிஞர் அபூ முன்தஸர் அல் பலூஷி என்பவர்‘ஈரானில் நடைபெறுவது தெரியாமலா? இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள்?’ என்று எழுதுகின்றார். அஹ்மத் நஜாதிக்கு குண்டு வைத்தார்கள் என்ற பேரில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பலர் இன்றும் சிறையிலுள்ளார்கள். இலங்கையில் தமிழீம விடுதலைப் புலிகள் உரிமை கோரிப் போராடியதைப் போன்று ஈரானில் ஜுன்துல்லாஹ், ஹரகதுல் புர்கான், முனல்லமதுன் புலூஸிஸ்தானிய்யா போன்ற அஹ்லுஸ்ஸுன்னா அமைப்புக்கள்உரிமைக்காகப் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகள் கூட ஈரானில் வாழும் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்குக் கிடைப்பதில்லை. இந்த நாட்டைப்பார்த்து இவர்கள் இஸ்லாமி ஆட்சி நடைபெறுவதாய் சொல்கிறார்கள். அமெரிக்காவை எதிர்க்கின்றார் என்றும், அணுப்புரட்சி பண்ணப் போகின்றார் என்றும் இந்த நஜாதியை இவர்கள் மெச்சுகின்றனர். இவர் மட்டுமல்ல உலகிலிருக்கும் அரசியற் தலைவர்கள் பலர் தமது சுய அரசியல் இலாபத்துக்காகக் கையிலெடுத்ததுவே அமெரிக்காவை எதிர்ப்பதாகும்.எனவே இந்த ஆக்கத்தில் இன்றைய ஈரானின் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு எதிரான நடவடிக்கைகளை விபரபாக நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
யார் இந்தக் கொமைனீ