Monday, January 26, 2009

இந்திய விடுதலை வீரர் அல்லாமா கரீம் கனி

இந்திய துணை கண்டத்தின் விடுதலை வீரர்களில் ஒருவர் அல்லாமா கரீம் கனி.

இளையாங்குடி-சோதுகுடியில் கி.பி. 1907ல் முஹம்மது இபுறாஹீம் அவர்களின் மகனாக பிறந்தார். செய்யது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகையின் வழி வந்த ஐத்ரூஸ் என்னும் பெரியாரின் கொள்ளுப் பேரராவார்.

இளமையிலேயே அபார நினைவாற்ற‌ல் பெற்றிருந்த கரீம் கனி ஒரு நாள் ஜும்ஆ தொழுகையில் இமாம் "
அல்காஷியா" சூராவை ஓத அதை அப்படியே மனதில் பதித்துக்கொண்டு வீடு வந்ததும் தம் தந்தையிடம் ஓதிக் காட்டினார்.

அது கண்டு மகிழ்ந்த தந்தை அவரை ரங்கூன் செய்ன்ட் பால்ஸ் ஆங்கில பள்ளியில் சேர்த்தார். ஒவ்வொரு வகுப்பிலும் " ட‌புள் பிரமோஷன் " பெற்று சில ஆண்டுகளில் எட்டாம் வகுப்பை அடைந்தார்.

அப்பொழுது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரை இலங்கைக்கு அனுப்பி 'லண்டன் மெட்ரிக்' படிக்க செய்தார். அங்கு அதனை படித்துவிட்டு லண்டனுக்கு சென்று 'ஐ.ஸி.எஸ்" நோக்குடன் ப்ர்மா திரும்பிய பொழுது தந்தை திடீர் என காலமாகி விடவே அது நிறைவேறவில்லை.

அதன்பின் சுருக்கெழுத்து பயின்று ' ரங்கூன் டெய்லி நியூஸ் ' பத்திரிக்கையில் நிருபராக திறம்பட பணியாற்றினார். 'உதய சூரியன்' எனும் பெயரில் ஒரு வார இதழை வெளியிட்டு அதன் மூலம் சமுதாய பணி
 
புரிந்தார்.

அப்பொழுது இளைஞர் முஸ்லீம் லீக்  சோலியா முஸ்லீம் லீக் தேகாப்பியாச சங்கம் ஆகியவற்றை தொடங்கி இளைஞர்களுக்கு பயிர்ச்சி அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

இந்தியாவில் மீலாத் விழா முதன் முதலாக கொண்டாடிய பொழுது ரங்கூனில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்து 1930ல் மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்தி ஜூப்ளி மன்றத்தில் மீலாது விழாவை சீரும் சிறப்புமாக  நடத்தி வெற்றி கண்டார்.

பர்மா சட்டசபை உறுப்பினராக தேர்தலில் நின்று  தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாமா கரீம் கனி அமைச்சர‌வையில் பார்லிமெண்டரி செயலாளராக பணியாற்றினார்.

அப்பொழுது 25 வயதே ஆன அல்லாமா கரீம் கனி ( 1934 ) நான்கு மாதங்கள் வட தென் இந்தியா சுற்றுப் பயணம் செய்து நாட்டின் சமூக நிலைகளை நன்கறிந்து கொண்டார்.

தென் கிழக்காசியாவிலேயே சிறந்த மார்க்க மேதைகளில்  ஒருவராக திகழ்ந்தவர். அல்லாமா கரீம் கனி

இந்திய விடுதலை வீரர் மௌலானா முஹம்மது அலி  இந்திய விடுதலை வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வலக்கரமாக திகழ்ந்தவர் அல்லாமா கரீம் கனி.

" மகாத்மா காந்திக்கு உலகம் அடக்கம் அந்த மகாத்மா இந்த மௌலானா முஹம்மது அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்." --பெரியார்.

"நான் இந்த ( மௌலானா முஹம்மது அலி ) வீரத்தலைவரை வெகுவாக  மதிக்கிறேன். இந்தியாவின் விடுதலைக்காக அவர் செய்துள்ள தியாகங்களும் ஆற்றிய அரும்பெறும் தொண்டுகளும் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் தங்க மை கொண்டு எல்லாவற்றையும் விட மிக முக்கியமான இடத்தில் எழுதப்படும் " -நேருஜி.

1929 ஆம் ஆண்டு மியன்மாரின் தலைநகரான ரங்கூனுக்கு ( யாங்கூன் ) வந்திருந்தார் மௌலானா முஹம்மது அலி . அப்பொழுது ஒரு நாள் மௌலானா முஹம்மது அலியும்  அவர்  தம் தோழர்களும் புடை சூழ புகழ் பெற்ற ' ரங்கூன் டெய்லி நியூஸ் " பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று அப்பத்திரிக்கையின் ஆசிரியரை சந்தித்து இன்று உங்கள் பத்திரிக்கையில் என்னுடைய பேச்சு ஏழு பத்தியில் பிரசுரமாகியிருக்கின்றது.

அந்த செய்தியைஉங்கள் பத்திரிக்கைக்கு தொகுத்து கொடுத்தது யார் ? என்று கேட்டதும்  ஆசிரியருக்கு ஏதொ தவறு நடந்துவிட்டதோ என அஞ்சி  திகைத்துப் போய் ' முஸ்லீம் இளைஞர் ஒருவர் தான் செய்தியை தந்தார். அவர் முன் எங்களிடம் நிருபராக இருந்தவர். அவர் எழுதி தந்த செய்தியை அப்படியே வெளியிட்டோம். அதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும்" என பரிவோடு கேட்டுக்கொண்டார்.

இதை கேட்டதும் மௌலானா முஹம்மது அலி வாய் விட்டு சிரித்து விட்டார். " நான் உங்களுக்கும் அந்த நிருபருக்கும் நன்றி சொல்ல  வந்திருக்கின்றேன். நான் பேசிய பேச்சுக்கள் இந்தியாவிலும் வெளிநாடுக்ளிலும் உள்ள ப புகழ் பெற்ற பத்திரிக்கைளிச் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை இது போன்று முழுமையாக வந்ததில்லை. ஒரு பகுதி வரும். அதுவும் தப்பும் தவறுமாக உறுக்குலைந்து போய் இருக்கும்.

ஆனால் இச்செய்தியை பார்த்ததும் என்க்கு மிக மன் நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.எனவே உங்களையும்
 
உங்கள் நிருபரையும் பாராட்டி போகத்தான் வந்துள்ளேன்" என கூறியதோடு  மௌலானா தான் தங்கியுள்ள முகவரியை கொடுத்து கட்டாயமாகத் தங்கள் நிருபரை என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள்" என கூறி விடை பெற்றார்..

மாறு நாள் அதிகாலையில் மௌலானா தம் தோழர்களுடன் சுவையான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு 22 வயதே நிரம்பிய ஓர் இளைஞர் முன்தோன்றி " நான் தான் கரீம் கனி ரங்கூன் டெய்லி நியூஸ் பத்திரிக்கை அலுவலகத்திற்கு என்னை தேடி வந்ததாக சொன்னார்கள்." என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதை கேட்டதும் " நீங்களா அந்த் நிருபர்? என ஆச்சரியத்தோடு கேட்டு கட்டி அனைத்து முத்தமிட்டார் மவ்லானா. பின் அவர் தன் அருகில் அமர்த்திக்கொண்டு " என் ஆங்கில பேச்சைக் கூட ஒரு சில பத்திரிக்கையாளர்கள் ஓர் அளவு  குறிப்பெடுத்துவிடுவார்கள். ஆனால் எனது உருது பேச்சை இதுவரைக்கும் யாரும் முழுமையாக எடுத்ததை நான் பார்த்தில்லை. ஆனால்  நான் சென்ற வெள்ளிக்கிழமை சூரத் பள்ளிவாசல் ஜும்மாவில் உருதுவில் பேசியதை அப்படியே அனுக்குலையாமல் ஒரு வார்த்தை கூட விடாமல் எடுத்து அதை மிகவும் திறமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தீர்கள்.
அதை என்னால்  பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நல்ல வேலையாக நீங்களே இங்கு வந்துவிட்டடீர்கள்.வரும் வெள்ளிக்கிழமையன்று சோலியா பள்ளியில் உருதுவில் பேசுகிறேன். அதை தாங்கள் தமிழில் மொழி பெயர்த்து பேச வேண்டும்." என மவ்லானா கேட்டுக் கொண்டார். அதை கரீம் கனி ஏற்றுக் கோண்டார்.

ரங்கூன் ( யாங்கூன் ) மாநகரத்தில் பெறிய ஜும் ஆ பள்ளிவாசல்கள் இரண்டு உண்டு. அவற்றில் ஒன்று சூரத்தி
 
முஸ்லீம்களுக்கும் மற்றொன்று தமிழ் முஸ்லீம்களுக்கு அதாவது சோலியா முஸ்லீம்களுக்கு.அவற்றில் ஏக காலத்தி ஆயிரக்கணக்கானோர் அடுக்கு மாடியுடன் அவை அமைந்துள்ளன.

ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் 1937 வரை இந்தியாவின் ஒரு மாகாணமாக பர்மிய நாடு ( மியன்மார் ) இருந்து வந்ததால் அங்கு இந்தியர் தாங்களின் தாய் திருநாட்டின்  ஒரு பகுதியாக அதை கருதினர்.

எனவே காட்டை கழனியாக்கி விவசாயிகளாகவும் வியாபாரிகளாகவும் தோட்டிகளாகவும் ழிலாளிகளாகவும் அதிகாரிகளாகவும் சுமார் மூன்று லட்சம் இந்தியர்கள் குடியேறி வாழ்ந்து வந்தன்ர்.

இவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள்; அதிலும் சிறப்பாக தமிழ் முஸ்லீம்களாவர் சோலியா முஸ்லீம்கள் என்று அங்கே அழைக்கப்பட்டார்கள்.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னே சோழ நாட்டிலிருந்து முதல்முதலாக குடியேறிய தமிழ் முஸ்லீம்களை 'சோலியா முஸ்லீம்கள்" என்ற அடை மொழியால் அழைத்தார்கள். தொடர்ந்து அங்கு குடியேறிய எல்லா தமிழ் முஸ்லீகளையும் சோலியா முஸ்லீம்கள் என்று அழைக்கத்தொடங்கினர்.(இதே நிலைதான் சிங்கப்பூர் மலேஷியாவிலும். சிங்கப்பூர் பினாங்கு கோலாலம்பூர் மற்றும் மலேஷியாவின் நகரங்களில் சோலியா
 
ஸ்ட்ரீட் CHULIA STREET  சோலியா மஸ்ஜித்கள் CHULIA MASJID) அந்த வம்சாவளியில் ஒருவராக திகழ்ந்தவர் தான் அல்லாமா கரீம் கனி.

அதன் பின் சிறிது காலத்தில் மௌலானா முஹம்மது அலி அவர்கள் காலமாகிவிட்டார்கள். மௌலானா முஹம்மது அலி அவ‌ர்க‌ளின் ம‌றைவு க‌ரீம் க‌னிக்கு பெரும் வ‌ருத்த‌த்தை த‌ந்தாலும் விடா முய‌ற்ச்சியால் மௌலானா முஹம்மது அலி ஜ‌ன‌ஹ‌ர் சென்ற‌ அதே வ‌ழியில் சென்று வெற்றியும்  பெற்றார்.

பின் இந்திய‌ சுத‌ந்திர‌ கழக‌ம் என்ற‌ அமைப்பினை நிறுவி  விடுத‌லைக்காக‌ தீவிர‌மாக‌ பணியாற்ற‌‌த் தொட‌ங்கினார். ர‌ங்கூனில் வெளியான‌ 'தேச‌வுப‌காரிஎன்ற‌ ப‌த்திரிக்கையில் கூட்டு ஆசிரிய‌ராக‌ ப‌ணிபுரிந்தார்.

அவ்வ‌மைய‌ம் நேதாஜி சுபாஷ் ச‌ந்திர‌ போஸின் புர‌ட்சிக் கருத்துக்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டார்.

காங்கிர‌ஸ் க‌ட்சியில் த‌லைமை பொறுப்பை உத‌றித் த‌ள்ளிவிட்டு ஜெர்ம‌னியின் ஹிட்ல‌ரோடும் ஜ‌ப்பானிய‌ அர‌சோடும் பேச்சு ந‌ட‌த்தி விட்டு 1943 ஜூலை 3 ல் போஸ் சிங்க‌ப்பூர் வ‌ந்தார். வந்த‌ ம‌று நாள் இந்திய‌ சுத‌ந்திர‌ப் ப‌டை ( ஐ.என்.ஏ.)யின் ரானுவ‌த் த‌ள‌ப‌தியானார். முற்றிலுமாக‌ தென் கிழக்காசியாவில் வாழ்ந்த‌ இந்திய‌ர்க‌ளை கொண்டே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌டை அது.

பர்மாவின் சுதந்திர கழகத் தலைவராக இருந்த  அல்லாமா கரீம் கனி ஜூலை4ம் தேதி நடைபெறவிருந்த ஒரு மகாநாட்டில் கல்ந்து கொள்ள சிங்கப்பூர் வந்திருந்தார். அவர் ஜூல 8ம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்தார். அதன்பிறகு இரு புரட்சித் தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மறு நாள் இரங்கூனுக்கு சென்ற கரீம் கனி ' ஆஜாத் ஹிந்து அரசு " பிரகடன விழாவில் கலந்து கொள்ள மீண்டும் சிங்க‌ப்பூர் வந்தார்.

சிங்க‌ப்பூர் நகராட்சி திடலில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் அல்லாமா கரீம் கனி தனக்கே உரித்தான அமுதத் தமிழில் உரையாற்றினார்.

இது உலகில் வேறெந்த தமிழனுக்கும் கிடைத்திராத அற்புதமான பெருமை.

அல்லாமா கரீம் கனி நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்க்கு நெருக்கமாகி இந்திய சுதந்திர அரசின் ஓர் அமைச்சராக பொறுப்பேற்று போஸின் வலது கரமாக பணியாற்றினார்.

இந்த‌ அர‌சின் த‌லைமைய‌க‌ம் ர‌ங்கூனுக்கு மாற்றப் ப‌ட்ட‌தால் இருவ‌ருக்கும் நெருக்க‌ம் இறுக்க‌மான‌து. இத‌னால் அல்லாமா க‌ரீம் க‌னியின் ஆழ்ந்த‌ நாட்டுப் ப‌ற்றையும் வ‌ர‌விருக்கும் நிக‌ழ்ச்சிக‌ளை முன் கூட்டியே க‌ணிக்கும் ஆற்ற‌லையும் க‌ண்டு விய‌ந்தார் போஸ்.

இம்பால் ப‌டையெடுப்பில் ஏற்ப‌ட்ட‌ இழப்பால் ம‌க்க‌ளூம் ப‌டை வீர‌ர்க‌ளும்  சோர்வ‌டைந்திருந்த‌ன‌ர். சோர்வை நீக்க‌ ர‌ங்கூனில் 1944 ஜூலை 4ம் தேதி முத‌ல் 11ம் தேதிவ‌ரை " நேதாஜி சுபாஷ் ச‌ந்திர‌ போஸ் வார‌ம் கொண்டாட‌ செய்தார். அதில் ம‌கிழ்ச்சியும் கிளர்ச்சியும் பொங்கும் ஒரு நாட‌க‌த்தை அல்லாமா கரீம் க‌னி ந‌ட‌த்தினார். அதன் மூலம் சுதந்திர உணர்வு பாதுகாக்கப்பட்டது.

ரங்கூனில் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையில் அல்லாமா கரீம் கனி 1945 ஏப்ரலில் பேங்காக் சென்றார். அங்கேதான் கடைசியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸை ஆகஸ்ட் 17ம் தேதி சந்தித்தார்.அப்போது " பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்று பேச்சை தொடங்கி அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார்.

பிரிட்டிஷார் போரில் ஜப்பானிடம் இழந்த‌ மலேயா சிங்கப்பூரை மீண்டும் கைப்பற்றிய பொழுது அல்லாமா கரீம் கனியையும் கைது செய்தனர்.

பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர் மீண்டும் பர்மா திரும்ப மனமில்லாது

சிங்க‌ப்பூர் வந்தார். வியக்த்தக்க வகையில் 28 நாட்களில் மலாய் மொழியில் பேசவும் எழுதவும் அனல் தெறிக்க சொற்பொழிவுகள் ஆற்றவும் திறமை பெற்றார். சிங்கப்பூர் ' மலேயா நன்பன் ' பத்திரிக்கையின் ஆசிரியரானார்.அத்துடன் மலாய் மொழியிலும் ஒரு பத்திரிக்கை நடத்தினார்.

இரு மொழி பத்திரிக்கைகளின் மூலமாக இந்திய வம்சாவழி மலாய் வம்சாவழி முஸ்லீம்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வுகளையும் உருவாக்கி அது வரை இருசாராரும் ஒருவர் இன‌த்தினை மற்றொருவர் இனம் தாழ்ச்சியாக எண்ணி உறவாடிக் கொண்டிருந்த சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

போர்க்காலத்தில் ஒரு ஹாலந்து( DUTCH) தம்பதியர் தம் பெண் குழந்தை ஒன்றை சிங்க‌ப்பூரில் விட்டுவிட்டு
 
தங்கள் நாடு திரும்பி விட்டார்கள். அக்குழந்தையைஒரு மலாய் முஸ்லீம் குடும்பம் " நாதிரா" என பெயரிட்டு இஸ்லாமிய முறைப்படி வளர்த்து ஆளாக்கி ஒரு முஸ்லீமுக்கு திருமணம் செய்து வைத்த‌ பின்னர் நாதிராவை எங்களிடம் திரும்பக் கொடு என்று கேட்ட பொழுது சிங்க‌ப்பூரில் இருந்த கிறிஸ்தவ அமைப்புகளும் ஒட்டு மொத்தமாக பெற்றோர்களுக்கு தூபம் போட அன்றைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்களும் ஒத்துழைத்து .குழ்ந்தை மைனராக இருந்தபொழுது மதமாற்றமும் திருமணமும் நிகழ்ந்ததால் அவை செல்லத்தக்கதல்ல என்றும் நாதிரா பெற்றோரிடமே திரும்பிட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நாதிரா ஒரு கிறிஸ்தவ அமைப்பில் ஒப்படைக்க செய்து விட்டார்கள்.

உணர்ச்சிகளால் உந்தப்பட்டு கொதித்தெழுந்து இந்த தீர்ப்பை  அக்கிரமங்களை எதிர்த்து அல்லாமா
 
கரீம் கனி தம் இரு மொழி பத்திரிகைகளில் எழுதியதுடன் பள்ளிவாயில்களிலும் மலாய் மொழியிலும் தமிழிலும் அனல் பறக்கும் சொற்பொழிவாற்றினார். அதன் காரணமாக மலேயா சிங்கப்பூரில் மலாய் இந்திய முஸ்லீம்கள் ஒன்றிணைந்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட இரத்தம் சிந்தப்பட்டு பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்து அல்லாமா கரீம் கனி கைது செய்யப்பட்டு சிங்க‌ப்பூரில் சிறையிலடைக்கப்பட்டார்.

பின்னர் பிரிட்டீஷார் மலேயாவுக்கு சுதந்திரம் அளிக்கக்கூடிய தருணத்தில்மலேயாவின் தலைவர்களின் முயற்ச்சிகளால் பிரிட்டீஷார் கரீம் கனியை விடுதலை செய்து பர்மா அல்லது இந்தியாவுக்கு செல்ல அனுமதித்தனர்.

இந்த இரு நாடுகளும் இந்த தியாக செம்மலை ஏற்றுக் கொள்ள மறுத்ததினால் இறுதியாக அரசியலில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பாக்கிஸ்தான் கரீம் கனியை ஏற்றுக் கொண்டது.

அல்லாமா கரீம் கனி திருக்குரான் ஹதீஸ் ஆராய்ச்சியில் மிகவும் திளைத்தவர். இஸ்லாம் மார்க்க சேவைக்கு தன்னை அர்ப்பணித்தவர்.

அல்லாமா கரீம் கனி தமிழ் மலாய் ஆங்கிலம்உருது அரபி பார்ஸி ஆகிய புலமை பெற்றவர். மிகவும் விரைவாக எழுதும் ஆற்றல் பெற்ற இவர் தேநீர் அருந்திக்கொண்டு  நிலக்கடலை சாப்பிட்டுக்கொண்டே
பத்திரிக்கைக்காண செய்திகள் அனைத்தையும் எழுதி முடித்துவிடுவார். இவர் எழுதிய நூல்கள் சந்நிதானம் அல்லது மூஃமினின் மிராஜ் முஸ்லீமின் முறைப்பாடுஜோதிஆன்ம சூரியன்முஹ்யிதீன் மான்யம்பிரளய சகாப்தம் ஆகியவை.

அல்லாமா க‌ரீம் க‌னியின் அருமை பெருமைக‌ளை தெரியாத‌ க‌ராச்சி ம‌க்க‌ளிடையே வ‌றுமையோடு வாழ்ந்து 22.6.1978ல் ம‌றைந்தார் சோதுகுடி தந்த மாணிக்கம்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
 
http://www.ilayangudi.org/ily/news.php

 

Sunday, January 25, 2009

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி?


நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள். வங்கியில் நயா பைசா இல்லை. ஆனால் ஒரு இலட்சம் இருப்பதாக கதை விடுகிறீர்கள். இன்னும் ஒரு இலட்சம் இருந்தால் பத்து இலட்சம் ஆக்கிவிடலாம் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். அவர்களும் ஒரு இலட்சம் தருகிறார்கள். உங்களைப் பொறுத்தவரையில் கம்பெனிக்கு முதல் ஒரு இலட்சம் வந்துவிட்டது. ஆனால் முதலீடு செய்த மற்றவர்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நீங்கள் (பொய்யாகச் சொன்ன) ஒரு இலட்சம், இவர்களுடைய ஒரு இலட்சம் இரண்டையும் சேர்த்து தற்போது கம்பெனியில் இரண்டு இலட்சம் உள்ளது.ஆக கையிலிருக்கும் ஒரு இலட்சத்தை இரண்டு இலட்சமாக உலகத்துக்கு அறிவிக்கிறீர்கள். இதைப் பார்த்து மேலும் பலர் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள். நீங்களும் வழக்கம் போல 5 இலட்சம் வந்தால் அதை 10 இலட்சம் என்றீர்கள். 20 இலட்சம் வந்தால் அதை 40 இலட்சம் என்றீர்கள். முதலீடு செய்தவர்கள் உங்களை சந்தேகப் படவில்லை. ஏனென்றால் நீங்கள் காண்பித்தது இலாபக் கணக்கு. உங்களை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஷேர் மார்கெட்டும் நம்புகிறது. அரசாங்கமும் நம்புகிறது.. வெளிநாட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. அல்லது அவர்களை நம்ப வைக்க நீங்கள் ஒரு 'இலாப நாடகம்' ஆடிக் கொண்டே இருக்கிறீர்கள்.ஒரு கட்டத்தில் கம்பெனியின் வங்கியிருப்பு 5400 கோடி ரூபாயாகிறது. நீங்கள் 8000ம் கோடி ரூபாய் என்று அறிவித்தால் உங்கள் கம்பெனி என்ன ஆகும். இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாகும். சத்யம் நிறுவனம் அப்படித்தான் பொய்க் கணக்குகளால் விசுவரூபமெடுத்தது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திறமையாக வழிநடத்தியவர் திருவாளர் ராமலிங்க ராஜீ. அவருடைய சரித்திரம் 'சத்யம் என்ற பெயரில் பொய்யை மெய்யாக்கிய சரித்திரம்'.சத்யம் பொய்யென அம்பலமாது எப்படி?

Wine-Women-Wealth இந்த மூன்றும் அதிகமாகிவிட்டால் எப்பேர்பட்ட கொம்பனுக்கும் நிலை தடுமாறிவிடும். ராமலிங்க ராஜீ முதல் இரண்டு 'W'க்களில் எப்படி எனத் தெரியாது. ஆனால் மூன்றாவது 'W'வில் ஆள் படு வீக். குறிப்பாக நிலத்தை வளைத்துப்போட்டு மேல் விலைக்கு விற்பதில் பயங்கர கில்லாடி. இதெற்கென்றே ஒரு மெகா ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு ஆந்திராவிலுள்ள மிக முக்கியமான நிலங்களும், நில ஆவணங்கள் எல்லாம் இவருடைய குடும்பத்தாரின் பெயரில் உள்ளது. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? MAYTAS. SATYAM இந்த பெயரை அப்படியே ஒவ்வொரு எழுத்தாக பின்னோக்கி எழுதினால் அதுதான் MAYTAS. விதியின் விளையாட்டைப் பாருங்கள். தெரிந்தோ தெரியாமலோ சத்யம் ரிவர்ஸ் கியரில் பயணிக்க MAYTAS நிறுவனம்தான் காரணம்.
MAYTAS நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து வந்தது?

திருவாளர் ராஜீ, நினைத்தபோதெல்லாம் தப்பான இலாப கணக்கு காட்டி பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் விலை உயரும்படி பார்த்துக் கொண்டார். காரணம் SATYAM நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ராஜீவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் இருந்தன. அதனால் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் கொள்ளை இலாபம். இலாபத்தை என்ன செய்வது? MAYTAS நிறுவனத்தில் முதலீடு செய்தார். MAYTAS நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆந்திராவிலிருந்த நிலங்களை எல்லாம் வளைக்கத் தொடங்கியது.
SATYAM - MAYTAS பொய்யும் மெய்யும்

ஒரு புறம் பொய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் SATYAM.மறுபுறம் பொய்பணத்தால் சம்பாதித்த மெய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் MAYTAS.ராமலிங்க ராஜீ ஆந்திர மக்களின் கனவு நாயகாக உயர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வளையத்திற்குள் வந்தார். பொய் மூட்டையான சத்யம் நிறுவனத்தின் செல்வாக்கை வைத்து பில் கிளிண்டனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அப்போதைய லேப்டாப் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரானார். கேட்கவே ஆளில்லை. SATYAM செல்வாக்கை தந்தது. MAYTAS நிலங்களைக் குவித்தது.ஆட்சி மாற்றம் - சத்யத்திற்கு வந்த சோதனை

ஆட்சி மாறியது. சந்திரபாபு நாயுடுவிற்குப் பதில் ராஜசேகர ரெட்டி வந்தார். இந்திய அரசியல் வழக்கப்படி, முந்தைய அரசின் செல்வாக்கான நபர்கள் எல்லாம் தற்போதைய அரசின் சந்தேக வலைக்குள் வந்தார். முதலில் சிக்கியவர் ராமலிங்க ராஜீ. ஆனால் நீண்ட காலம் அவரை ஒதுக்க முடியவில்லை. சத்யம் ஏற்படுத்திய ஒளிவட்டமும், MAYTAS நிறுவனத்தின் பண வட்டமும் தற்போதைய முதல்வரையும் மசிய வைத்தது. வலையை விரித்தவரே வலையில் வீழ்ந்தார். மீண்டும் அரசுக்கு நெருக்கமானார் ராஜீ.நக்ஸலைட்டுகள் வழியாக முதல் புகைச்சல்

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வளர்ச்சி பற்றிய சந்தேகங்கள் புகைய ஆரம்பித்தன. முதலில் பகிரங்கமாக எதிர்த்தவர்கள் ஆந்திர நக்ஸலைட்டுகள்.. பணத்தால் ஏழை நிலங்களை வளைக்கிறார் என்று போராடினார்கள். ஆனால் கொடி பிடித்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்பதால் மக்களின் கவனம் பெறவில்லை. பணக்கார மீடியாக்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.
மெட்ரோ ரயில் வடிவில் அடுத்த புகைச்சல்

அடுத்து வந்தது மெட்ரோ ரயில் புராஜக்ட். இந்த புராஜக்டுக்கு ஆலோசகராக திரு. Sridhar நியமிக்கப்பட்டார். Sridhar கடந்த ஆண்டின் 'மிகச் சிறந்த இந்தியராக' என்.டி.டிவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மெட்ரோ ரயிலை தனி மனிதனாக போராடி டெல்லி மக்களுக்கு பெற்றுத் தந்த சாதனையாளர், நேர்மையாளர், அரசியல் மற்றும் பண சூழ்ச்சிகளுக்கு வளைந்து கொடுக்காதவர். ஆனால் அவரை வளைக்க நினைத்தார் ராஜீ. காரணம் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலங்களை வைத்திருந்தவர் ராஜீ, அதாவது அவருடைய நிறுவனமான MAYTAS. சாதா நிலங்களை விலை உயர்த்தி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வாங்குமாறு திரு. Sridharஐ நிர்பந்தித்தார். அவர் இந்த ஊழலுக்கு உடன்பட மறுத்து கண்டனக்குரல் எழுப்பினார். எப்போதுமே நேர்மையின் குரல் அமுக்கப்படும். அதன்படியே ராஜீவைக் கண்டிக்க வேண்டிய அரசு திரு. Sridhar அவர்களை தேவையில்லை என திருப்பி அனுப்பியது. வழக்கம்போல பணக்கார மீடியாக்கள் இதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாம் பணம் செய்யும் மாயம்.கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள் - உஷாரான ராஜீ

கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்ததும் ராஜீ உஷாரானார். இங்கேதான் அவருடைய கிரிமினல் மூளை உச்சத்திற்கு வந்தது. அவருடைய முன்னேற்பாட்டின்படி மீண்டும் பொய்யான தகவல்களை வைத்து சத்யம் ஷேர் மார்கெட்டில் எகிறியது. அப்போது பெரும்பாலான ஷேர்களை வைத்திருந்த ராஜீவும், அவருடைய குடும்பத்தாரும், அவருடைய பணக்கார கிரிமினல் நண்பர்களும் தங்களுடைய ஷேர்களை விற்று பெரும் பணம் பார்த்தார்கள். அதாவது சத்யம் நிறுவனத்தின் மதிப்பு 8000ம் கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டப்பட்டபோது, சத்யம் நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகள் வெறும் 5% மட்டுமே. அதாவது இனிமேல் சத்யம் திவால் ஆனால் கூட ராஜீவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் நயா பைசா கூட கையை விட்டுப் போகாது. நம்மைப் போன்ற அப்பாவிகளுக்குத்தான் பட்டை நாமம்.ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - பொய்யின் முதல் வீழ்ச்சி

அமெரிக்க பொருளாதாரம் சரிந்தவுடன், அமைஞ்ச கரையில் நிலங்களின் விலை குறைந்தது. ஆந்திராவில் குறையாமலிருக்குமா? அங்கேயும் மளமளவென விலை சரிய ஆரம்பித்தது. கிளைமாக்ஸில் வில்லன் எதிர்பாராமல் ஏமாறுவது போல, ராஜீ எதிர்பாராத இந்த சரிவு அவருடைய ரியல் எஸ்டேட் பொக்கிஷமான MAYTAS நிறுவனத்தை பாதித்தது. என்ன செய்வது என யோசித்தார். அவருடைய கிரிமினல் மூளை மீண்டும் அபாரமாக வேலை செய்தது.ஒரே கல்லில் பல மாங்காய் - MAYTAS, SATYAM-மாக மாற முயற்சித்தபோதுஒரு புறம் 5400 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்யம் 8000 கோடி ரூபாயாக பொய் விசுவரூபம்.மறு புறம் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள MAYTAS அதளபாதாளத்தில் விழப் போகும் அபாயம்.சத்யத்தில் பணமில்லை, ஆனால் இருப்பதாக கணக்கு. MAYTASல் பணம் உண்டு, ஆனால் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியால் கரைந்து கொண்டிருக்கிறது. தடுப்பது எப்படி? அப்போது உதயமான ஐடியாதான் SATYAM நிறுவனத்தின் (இல்லாத) பணத்தால் MAYTASஐ வாங்குவது.அப்படி வாங்கிவிட்டால் சத்யம் நிறுவனத்திலிருந்து 7000ம் கோடி ரூபாய் அவருடைய குடும்பத்தினருக்கு வந்துவிடும். அதெப்படி...சத்யத்தில் இருப்பதே 5400 கோடி ரூபாய்தானே? பிறகெப்படி ஏழாயிரம் கோடி கிடைக்கும்? மீதி 1600 கோடிக்கு எங்கே போவது? நாமாக இருந்தால் இப்படித்தான் கவலைப்படுவோம். ஆனால் ராமலிங்க ராஜீவிற்கு இது ஒரே கல்லில் பல மாங்காய்கள். அக்கவுண்ட்சில் ஒரே ஒரு வரி எழுதுவது மூலம் 7000ம் கோடி ரூபாய் SATYAM நிறுவனத்திலிருந்து அவருடைய மனைவிக்கும் மக்களுக்கும் வந்துவிடும். ஆக MAYTAS நிறுவனம் Safe. இது முதல் மாங்காய்.உண்மையில் கைமாறியது வெறும்(?) 5400 கோடி ரூபாய்தான். மீதி 1600 கோடி ரூபாய் பற்றி ராஜீ வாய் திறக்கமாட்டார். ஏனென்றால் இப்படி கை மாறியதன் மூலம் சத்யம் நிறுவனத்தில் 7000 கோடி ரூபாய் இருந்ததாக கணக்கில் வந்துவிடும். அதாவது இத்தனை நாள் வெளியில் சொல்லாமல் காப்பாற்றி வந்த பொய் உண்மையாகிவிடும். இதனால் SATYAM நிறுவனம் Safe. இது இரண்டாவது மாங்காய்.எந்த பிரச்சனை வந்தாலும் உலகப் பொருளாதார பிரச்சனையால் ரியல் எஸ்டேட் அவுட், ஐ.டியும் அவுட். அதனால் சத்யம் நிறுவனமும் அவுட் என்று ஒற்றை வரியில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் . இது மூன்றாவது மாங்காய்.புகைச்சல் கொளுந்துவிட்டு எரிந்த கதை - உலக வங்கி தடை மற்றும் போர்டு மெம்பர்கள் ராஜினாமாசுருட்டுவதையெல்லாம் சுருட்டிக்கொண்டு, பட்சி பறக்கப் பார்க்கிறது என்று சிலர் மோப்பம் பிடித்துவிட்டார்கள். சில போர்டு மெம்பர்களுக்கு இது துளியும் பிடிக்கவில்லை. விஷயம் போர்டுக்கு வெளியே கசிந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸ் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் எதற்காக MAYTASஐ வாங்கி நஷ்டப் படவேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இது ராமலிங்க ராஜீவிற்கு வந்த முதல் தோல்வி.இதே வேளையில் உலக வங்கி சுதாரித்துக் கொண்டது. இல்லாத இருப்பைக் காட்டி உலக வங்கியிடமிருந்து சத்யம் நிறுவனம் பல சலுகைகளை அனுபவித்து வந்திருப்பதாக குற்றம் சுமத்தி அடுத்த 8 வருடங்களுக்கு தடை விதித்தது..கிளைமாக்ஸ் - பொய்யை மெய்யாக்க நினைத்தபோது . . .

உலக வங்கியே தடை விதித்த போதும் ராஜீ தளரவில்லை. நான் நேர்மையாளன், என்னை சந்தேகப் படாதீர்கள் என்று தைரிய முகம் காட்டினார். உலக வங்கியை எதிர்த்து நோட்டீஸ் விட்டார். ஆந்திர மாநில அரசு அவருக்கு ஆதரவளித்தது. எனவே மீண்டும் இரு கம்பெனிகளையும் எதிர்ப்புகளையம் மீறி இணைக்க முயற்சித்தார். ஆனால் விஷயம் திடீரென பெரிதாகி தெருக்கோடி வரைக்கும் வந்தவுடன், இணைப்பு இல்லை என்று பின்வாங்கினார். இந்த நெருக்கடியில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் அலசப்பட்டன. ஊதிப் பெருசாக்கப்பட்ட ஊழல் விசுவரூபமெடுத்து. 5400 கோடி ரூபாய் 8000 கோடி ரூபாயாக போலியாக உயர்த்திக் காட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.சத்யம் நிறுவனத்தின் ஆபீஸ் பியூன் முதல் பிசினஸ் பார்ட்னர்கள் வரை திடீரென ஒன்று திரண்டு நெருக்கடி தர ஆரம்பித்ததும், "ஆமாம்.. நான் தவறு செய்துவிட்டேன்" என்று ராஜீ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.சத்யம் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன? பூஜ்யம்.

5040 கோடி ரூபாயை 7000 கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டினேன் என்று சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டு அவர் தலை மறைவாகிவிட்டார்.ஆனால் அவர் சொல்லாமல் விட்டது என்ன தெரியுமா? சத்யம் நிறுவனத்திற்கு இருக்கும் 1000 கோடி ரூபாய் கடன். பிரச்சனை முற்றியவுடன் 140 ரூபாய்க்க விற்ற சத்யம் நிறுவனப் பங்கு பல்டி அடித்து 30 ரூபாய்க்கு வந்து விட்டது.அதாவது சுருக்கமாகச் சொன்னால் சத்யம் நிறுவனம் இன்று ஒரு பூஜ்யம்.
சம்பளம் தர பணமில்லை:

சத்யம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 53,000 பேர். இவர்களுக்கு சம்பளம் தர மட்டும் மாதம் ரூ.550 கோடி தேவை. இதைத் தவிர ஊழியர் நல நிதியாக மாதம் ரூ.10 கோடி தர வேண்டுமாம்.ஆனால் கையிருப்பில் இருப்பதோ, ராஜு விட்டுவைத்துள்ள ரூ. 340 கோடிதான்.

காகிதப் புலிகளின் புதிய ஒப்பாரி.

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள காஸாவின் ஓலம் கேட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு 100 மைல்களுக்கப்பால் உள்ள வன்னித்தமிழனின் ஓலம் கேட்கவில்லை. !! – நிதர்சனம்.கொம் 16.1.2009

ஆமை சுடுவது மல்லாத்தி.அதை நாம சொன்னாப் பொல்லாப்பு. என்று எங்கட உம்மம்மா ஓரு கதை சொல்லுவா.அப்படி இருக்கிறது சாணக்கியர்களின் ஓலம்.

ஆம். 3500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் காஸாவுக்காக கூக்குரல் இடுகின்றீர்களே ! 100மைல்களுக்கப்பால் இருக்கும்; எங்களுக்காகவும் கொஞ்சம் அழுவுங்களேன் ! ? என்கின்றனர் எமது ஜாம்பவான்கள்.

என்னத்தை சொல்வது.
எப்படி சொல்வது.
எங்கிருந்து ஆரம்பிப்பது.
எப்படி ஆரம்பிப்பது.
அழுதழுது எழுதுவதா ?
வெம்பி வெடித்து எழுதுவதா ?

1991இல் மன்னார் முருங்கன் பள்ளிவாசலில் இறந்த முஸ்லீம்களின்; உறவினர்களும், எரிக்கப்பட்ட கடைகளின் சொந்தக்காறர்களும் இன்னும் அக்குறணை, மாத்தளை, மடவளையில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைச் சொல்வதா ? அல்லது அப்போது சிறிலங்காவின் முதலாவது முஸ்லீம் உதவி அரசாங்க அதிபராக இருந்த “மகுறுப்”; உங்களால் சுட்டுக் கொல்லப்பட்டும் இதுவரை விட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அக்குடும்பத்தின் அவலத்தைச் சொல்வதா ?

காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்களைச் சுட்டுக்கொன்று சப்பாத்துக்கால்களால் குரான்களை எட்டி உதைத்து எள்ளி நகையாடியதைச் சொல்வதா ? அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைந்து அப்பாவி முஸ்லீம்களைக் கொன்று வீதியில் சென்று கொண்டிருந்த 16 முஸ்லீம்களை கைகளை கட்டி சுட்டும் , பசியடங்காமல் வெட்டியும் கொன்றஅந்த சூரசம்ஹாரத்தைச் சொல்வதா ??

பொத்துவில் பாணமை முதல் மூதுர்,கிண்ணியா,தோப்புர் வரை உள்ள முஸ்லீம்களை அவர்களது வயல்நிலங்களைவிட்டு விரட்டியடித்து அவர்களை சோத்துக்கு வழியில்லாதவர்களா க்கி வெறும் வயிற்றுக்காறர்களாக்கிய அந்த சோகத்தைச் சொல்வதா ?

கடந்த 15 வருடங்களாக உங்களிடம் வயல்நிலங்களை இழந்த அந்த ஏழை முஸ்லீம் விவசாயிகள் வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக வளைகுடா நாடுகளில் “அரபிக்களின் கக்கூசுகளைக்” கழுவிக்கொண்டிருக்கும் அகோரத்தைச் சொல்வதா ?

யாழ் மாவட்டத்தில் இருந்த 91ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி அந்த அப்பாவி மக்களை புத்தளம் முதல் கொழும்பு ,வேருவளை வரை பிச்சை எடுக்க வைத்து சிறிலங்கா வாழ் மொத்த சோனியையும் பைத்தியக்காறர்களாக்கிய அந்ததான்தோன்றித்தனத்தைச் சொல்வதா ?

எதைச் சொல்வது ! எதை விடுவது !!

“அயல்வீட்டாரையும் உன்குடும்பத்தார் போல் நேசி” என்று சொல்கின்ற மதம் இஸ்லாம்.அடுத்த வீட்டுக்காறன் பசித்திருக்கும் போது நீ உன்னிடம் உள்ள உணவில் ஒரு பகுதியை அடுத்த வீட்டுக்காறனுக்கு கொடு என அறுதியிட்டு சொன்ன மதம் இஸ்லாம்.

நீ எந்த அரசின் கீழ் வாழ்கின்றாயோ, அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நட என உறுதிபட சொன்ன மதம் இஸ்லாம்.அதற்காக கொத்தடிமையாக வாழச்சொல்லவில்லை. உனது தொழில்,உனது மார்க்கக் கடமையைச் செய்ய ஒரு இடம் (பள்ளிவாசல் ) இருந்தால் போதும் என்று உறுதிபடவும் சொன்ன மதம் இஸ்லாம்.

அந்த புண்ணிய மதத்தை தழுவிய முஸ்லீம்கள்தான் சிறிலங்காவில் வாழ்கின்றனர். நாம் சிறிலங்காவில் எந்தப்பகுதியில் வாழ்கின்றோமோ அந்தப் பகுதி மக்களுடன் கைகோர்த்து சகஜமாகத்தான் வாழ்கின்றோம்.வாழ்ந்தோம்.

காலியில் உள்ள முஸ்லீம்கள் சிங்கள “பெரஹர” காலத்தில் எப்படி சிங்கள மக்களுடன் சேர்ந்து பெரஹர கொண்டாடினார்களோ அதே போல்தான் வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் பொங்கல்,தீபாவழி,சித்திரை காலங்களில் தமிழ் மக்களுடன் சேர்ந்து மோதகம்,அவல்,சக்கரைப்பொங்கல் என உண்டு,உறங்கி வாழ்ந்தோம்.இப்போதும் வாழ்கின்றோம்.

அதுமட்டுமா ?தமிழ் இளைஞர் பேரவை காலத்திலிருந்தே வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் இலைமறை காய்களாக இளைஞர்களும், வியாபாரிகளும் சகல விடுதலை அமைப்புக்களுக்கும் உதவி செய்தார்கள்,

அப்போது நீங்கள் ஆயுதங்கள் வாங்க அல்லாடிய போதும், இந்தியாவுக்கு உங்களை பைபர்கிளாஸ் போட்டுகளில் ஏற்றி இறக்கவும், உங்கள் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தவும் ,உங்கள் உறுப்பினர்கள் பிடிபட்டால் பாதுகாப்பு படையினரிடம் பேரம் பேசி அவர்களை மீட்கவும் உதவினார்கள்.

இப்போது கொழும்புக்கு தமிழர்கள் வர பாஸ் வேண்டும் என அரசு அறிவித்த போதும் கூட வவுனியாவில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பாஸ_ம் எடுத்து கருவாடு, புகையிலை லொறிகளில் கூட்டி வருபவர்களும் அதே முஸ்லீம்கள்தான்.

ஐரோப்பிய, அவுஸ்திரேலிய,அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள 99வீதமான தமிழ் பெண்கள் முஸ்லீம்களின் பாரம்பரிய உடையான பர்தா அணிந்து , முஸ்லீம்களின் துணையுடன்தான் கவுரவமாக வந்து சேர்ந்தனர். வந்துகொண்டும் இருக்கின்றனர்.

இப்போது புதுசாக நாம் வன்னித்தமிழர்களுக்கு குரல்கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. அந்த அப்பாவி மக்களுக்கு தெரியும் எம்மைப்பற்றி.சிறிலங்காவில் ஒவ்வொரு கிராமத்திலும் சுருட்டுக்கடை, புகையிலைக்கடை ,சில்லறைக்கடை வைத்திருந்த அந்த மக்களுக்கும், எங்களுக்கு எழுத்தறிவித்த அந்த வடமாகாண ஆசிரியர்களுக்கும், கதிர்காமத்திற்கு நடை பயணம் போகும் போது முஸ்லீம் கிராமங்களில் தங்கி நின்று, ஒரு கவளம் தண்ணீர் குடித்துப்போன அந்த வன்னித்தமிழனுக்கும் தெரியும் சிறிலங்கா சோனியின் அன்பும, அரவணைப்பும்.

ஆசிரியர்களாக , பொலீஸ் அதிகாரிகளாக , தபாலதிபர்களாக ,நீதிமான்களாக எங்கள் ஊர்களில் கடமையாற்றி , எங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து ஓய்வு நேரங்களில் எங்களுக்கு ஆங்கிலமும் , பஞ்சதந்திரக் கதைகளும் சொல்லித்தந்த அந்த மாமனிதர்களுக்கு தெரியும் சிறிலங்கா முஸ்லீம்களின் மதமும் , மந்திரமும்.

படித்த பட்டதாரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றாராம். கிராமத்தில் ஒரு குடிசைக்கு முன்னால் ஒரு மாடு சூடு மிதித்துக்கொண்டிருந்ததாம். மாட்டிற்குப்பக்கத்தில் யாருமே இல்லையாம். இவர் மாட்டிற்குப்பக்கத்தில் போய் பார்திதிருக்கின்றார்.யாருமே இல்லை. இவர் உடனே குடிசைக்குப்பக்கத்தில் போய் எட்டிப் பார்த்திருக்கின்றார்.அங்கே கிராமத்தான் சாக்குக் கட்டிலில் படுத்து பாட்டுப்பாடிக் கொண்டிருந்திருக்கின்றான். இவர் உடனே அவனை தட்டி கூப்பிட்டு நீ இங்கே படுத்துக்கொண்டிருக்கின்றாயே ! மாடு தனியே சுற்றிக் கொண்டிருக்கிறதே ! அது சுற்றாமல் நின்று விட்டால் வேலை நடக்காதே ! என்றிருக்கிறார்.அதற்கு கிராமத்தான் அதற்காகத்தான் அதன் கழுத்தில் மணிகட்டியுள்ளேன். அது சுற்றாமல் நின்றால் மணிச்சத்தமும் நின்று விடும். நான் எழும்பிப்போய் மாட்டை மீண்டும் சுற்றவிடுவேன் என்றானாம். மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை ஆட்டினாலும் மணிச்சத்தம் கேட்குமே அப்போது என்ன செய்வாய் என படித்தவர் கேட்டுள்ளார். ஐயா அதை நான் அந்த அளவுக்கு படிக்க வைக்கவில்லை.அதற்கு கள்ளம் கபடம் தெரியாது என்றானாம்.

அது போல் அந்த மக்களுக்குத் தெரியும் பாதை திறந்தவுடன் வரும் முதல் வாகனம் முஸ்லீம் களுடையதாகத்தான் இருக்கும் என்று.

மொனறாகலை, பிபிலை ,பதியத்தலாவ,பதுளையிலிருந்து சுருட்டு,புகையிலை,சின்ன வெங்காயம் ,உறுண்டைகிழங்கு வாங்கவும் கண்டி, கொழும்பு, கேகல்லவிலிருந்து வாகனங்கள் வாங்கிவிற்கவும் நீர்கொழும்பு, புத்தளம் ,அனுராதபுரத்திலிருந்து கடலட்டை, நண்டு ,கணவாய் என்பன வாங்கவும் துள்ளித் தெறித்து வந்து அந்த வன்னிமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகின்றவர்கள் இந்த முஸ்லீம்கள்தான் என்று அந்த வன்னி மக்களுக்குத் தெரியும்.

மீண்டும் அந்த மக்களின் காலைவாரி, வடிவேல் பாணியில் உசுப்பேத்தி, உசுப்பேத்தி அந்த மனிதப்புனிதர்களை கொன்றுவிடாதீர்கள்.

வெள்ளந்திரியான அந்த அப்பாவி வன்னி மக்களை , வேட்டை நாய்களாகப் பாவித்து , வேள்வித் தீ நடத்தி ,இன்று வெட்கித்தலை குனியும் படியாக நாளுக்கு 20,30 என அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு கண்ணீரும் கம்பலையுமாகவரும் அந்த வன்னிமக்களுக்கு நாம் எப்போதும் துணைநிற்போம்.

ஆனால் அனைத்தையும் , அனைத்தையும் இழந்த அந்த யாழ்மாவட்ட முஸ்லீம்களுக்காக எப்போதாவது எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் அல்லது ஒரு உறுப்பினர்.அல்லது ஒரு நாய்.அல்லது ஒரு காக்காய்.அல்லது ஒரு குருவியாவது குரல் கொடுத்ததா ?

- யஹியா வாஸித்