Wednesday, November 26, 2008

இறகை இழந்ததா OR வாழ்க்கையையே இழந்ததா?

ஒரு ஈயிடம் அதன் தாய் இறக்கும் முன் அறிவுரை கூறியது. "மகனே, எப்போதுமே பளபளப்பான ஒட்டிக் கொள்ளக் கூடிய காகிதங்களில் இருந்து விலகியே இரு. உன் தந்தை அதில் சிக்கி தான் இறந்து போனார்." அந்த ஈயும் தாயின் அறிவுரையைக் கேட்டு பளபளப்பான ஒட்டும் காகிதங்களில் இருந்து சில காலம் விலகியே இருந்தது.

ஆனால் பல இளைய ஈக்கள் அந்த ஒட்டும் காகிதங்கள் அருகில் அனாயாசமாக பறந்து செல்வதைக் கண்ட போது அதற்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஈக்கள் வேகமாகச் சென்று உட்கார்ந்ததுடன் பிரச்சினை ஏதும் இல்லாமல் திரும்ப வந்த போது அந்த ஈயிற்கு தாய் அனாவசியமாக பயப்பட்டதாகத் தோன்றியது.

அந்த பளபளத்த காகிதங்களின் அருகில் சென்ற போது ஈக்களின் பிரதிபலிப்பு பார்த்த போது அது பார்வைக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. அந்த ஈ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெள்ள அந்தக் காகிதத்தின் அருகே சென்று சென்று வந்தது. பிரச்சினை எதுவுமில்லை. சிறிது நேரத்தில் அதற்கு தைரியம் கூடியது. மின்னல் வேகத்தில் சென்று அந்தக் காகிதத்தில் அமர்ந்து பார்த்து நொடியில் மின்னல் வேகத்திலேயே கிளம்பியது. பிரச்சினை இல்லை.

அந்தக் காகிதத்தில் அப்படியே ஈக்கள் உட்கார்ந்து அனாயாசமாக போவதைப் பார்த்த அந்த ஈயிற்குத் தன் அனுபவமும் சேர்த்து யோசிக்கையில் இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. பகட்டும் பளபளப்பும் நிறைந்த அந்தக் காகிதத்தில் அமர்ந்து விளையாடுவது ஜாலியாக இருந்தது. போய் சற்று அதிக நேரம் தங்கி வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மிக களைப்படைந்து விட்ட ஈ அப்படியே உறங்கி விட்டது. அது விழித்த பிறகு பறக்க நினைத்த போது ஒரு இறகு அந்த காகிதத்தில் நன்றாகவே ஒட்டிப் போயிருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. அந்தக் காகிதத்தில் இருந்து அந்த ஈ தப்பிக்க முடிந்தாலும் கூட அந்த ஒட்டி போன இறகை இழந்தேயாக வேண்டும்.

அது இறகை இழந்ததா, இல்லை வாழ்க்கையையே இழந்ததா என்று நாம் ஆராயப் போவதில்லை. இந்த உதாரணத்தைத் தன் நூல் ஒன்றில் சொன்ன ரால்ப் வாலெட்டும் அது பற்றிக் கூறவில்லை.

நாம் ஆராயப் போவதெல்லாம் அந்த ஈக்கு அந்தக் காகிதத்தின் மீது சென்று அமரும் அவசியம் இருந்ததா என்பதை மட்டும் தான். அந்த அவசியம் இருக்கவில்லை என்பதே உண்மை. அது ஆபத்தானது என்பதையும் அது தந்தையின் உயிரையே குடித்தது என்பதையும் ஈ முன்பே அறிந்திருந்தது. ஆனால் அந்தக் காகிதத்தின் பளபளப்பு, போய் ஓரிரு தடவை ஒன்றும் ஆகவில்லை என்கிற தைரியம், மற்றவர்களும் செய்கிறார்கள் என்ற சமாதானம், ஜாலியாக இருக்கிறது என்கிற எண்ணம் எல்லாமாக சேர்ந்து அதன் அறிவை மழுங்கடித்து ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது.

தீ தான் சார்ந்திருக்கும் பொருளை எல்லாம் சாம்பலாக்கும் வல்லமை படைத்தது. அந்தத் தீயை விட ஆபத்தான தீயவை இருக்கின்றன.

உலகில் அந்த பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதத்தைப் போன்ற தீய விஷயங்கள் பல இருக்கின்றன. சூதாட்டம், போதைப் பழக்கம், தகாத உறவு வைத்துக் கொள்ளல் , தொலைக் காட்சிபோன்ற, வலைகள் எத்தனையோ இருக்கின்றன. ஆரம்பத்தில் அது போன்ற வலையால் பெரிய தீங்கு ஏற்படாத நிலைமை கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அதில் தங்க ஆரம்பிக்கும் போது உங்களை உடும்புப்பிடியுடன் அந்த வலை உங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெரும் சேதத்தையோ, நாசத்தையோ ஏற்படுத்தாமல் அந்த விஷ வலை உங்களை தப்பிக்க விடாது.

வாழ்க்கையில் பல விஷயங்கள் இல்லாமல் நாம் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் நாம் அப்படி நினைக்கத் தவறுவது தான் பல வருத்தங்களுக்கு மூல காரணமாக உள்ளது. அந்த ஈயின் இயல்பான வாழ்க்கைக்கு எப்படி அந்த பளபளப்புக் காகிதம் எந்த விதத்திலும் தேவையாக இருக்கவில்லையோ, அப்படியே நாம் மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கை வாழ முன்பு குறிப்பிட்டது போன்ற தீய வலைகள் தேவையில்லை. இப்படி ஏதாவது ஒரு வலை உங்கள் வாழ்க்கையில் கவர்ச்சியை ஏற்படுத்துமானால் இந்த ஈ கதையை நினைவுபடுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக விலகிச் செல்லுங்கள்.
Thanks : Anwarali
Anwar.Ali@Saudireadymix.com.sa

Monday, November 24, 2008

ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!




இது குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்துத்துவ பயங்கரவாத சாமியாரிணி கும்பல் கைது செய்யப்படுவதற்கு முன் வெளியான கட்டுரை!

டெல்லி காவல்துறை குண்டுகள் வெடிக்கும் 'மர்மத்தை கண்டு பிடித்து' விட்டதால் நான் எனது சுய வாக்குமூலத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். சந்தேகப்படுவது இந்திய அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை அல்ல என்றாலும் செழிப்பான ஜனநாயக அமைப்பிலிருந்து பிரிக்க முடியானதொரு அங்கம் அது. நமது உளவுத்துறை அமைப்புகளின் அஸ்திவாரம் சந்தேகப் படுவதில்தான் இருக்கிறது எனலாம். எனவே, யார் மேல் வேண்டுமானாலும் சந்தேகப்படும் உரிமை நிச்சயமாக நம் உளவுத் துறையினருக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதே சந்தேகப்படும் உரிமை சாதாரண இந்தியக் குடிமகனுக்கு இருப்பதையும் யாராலும் மறுக்கவியலாது. சமத்துவம் ஜனநாயகத்தின் அடையாளமல்லவா?


கேள்விகள் கேட்டு பதில் விளக்கங்கள் பெற வாய்ப்பில்லாத ஓர் அரசாங்க அறிக்கை வேதவாக்குப் போலக் கருதப்படும்போது என்னுள் இருக்கும் 'பத்திரிக்கையாளனுக்கு' எரிச்சல் ஏற்படுகிறது. தீர்மானமான முடிவுகளுக்கு வருவது ஊடகவியலாளர்களின் பணி அல்ல. ஒரு சமுதாய வட்டத்திற்குள் நிகழ்பனவற்றை அந்த வட்டத்திற்கு வெளியில் நின்று விருப்பு வெறுப்பின்றி ஊடகத்தில் பதிவுசெய்வதுதான் அவரது பணியாக இருக்க வேண்டும். ஒரு பத்திரிக்கையாளர் அந்த வட்டத்திற்குள் நுழைந்தால் அவரும் அந்த நிகழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விடுகிறார். ஒரு தரப்பினருடன் நெருக்கமாக இருப்பது சார்பு நிலையைத் தோற்றுவிக்கும். சார்பு நிலை மறுதரப்பினரின் நியாயங்களைப் பார்க்க முடியாத குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஓர் உண்மையான பத்திரிக்கையாளர் இது போன்றதொரு கருத்துக் குருடராக இருக்கவே கூடாது.

மக்களிடையே பொதுவான அபிப்ராயங்களை உருவாக்குவதில் ஊடகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதானால், அவற்றிடையே 'கருத்துக் குருட்டுத் தன்மை' நிலவுவது பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்தியறிக்கையும் பொது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நாட்டின் அரசியலமைப்பில் 'நான்காம் தூண்' என்று கருதப்படும் ஊடகங்கள், ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் 'நான்காம் தவறு' என்று சொல்லத்தக்க விதத்திலேயே செய்திகளை வெளியிடுகின்றன. குண்டு வெடித்தது மக்கா மசூதியாக இருந்தாலும், தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்ட மாலேகானாக இருந்தாலும், சந்தேக முள் தானாகவே சாய்வது முஸ்லிம்கள் பக்கம் தான். ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் அலைக்கழிக்கப்படுவதும் முஸ்லிம்கள்தான். ஒரு புறம் குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயங்கரவாதிகள், மற்றொரு புறம் உளவுத் துறை அமைப்புகள் என இருபுறமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலையில் முஸ்லிம்கள். இந்த இரு தரப்பினருமே முஸ்லிம்களை நம்புவதில்லை என்பதுதான் பரிதாபம். அன்றாட வாழ்க்கைப் பாட்டை தீர்ப்பதற்கே போராடும் முஸ்லிம்களுக்கு குண்டுகளைப் பற்றி சிந்திப்பதற்குக்கூட நேரம் கிடையாது என்பது ஏனோ இவர்களுக்கு புரிவதேயில்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பும் இஸ்லாம் எனும் 'பச்சைக் கண்ணாடி' கொண்டே பார்க்கப் படுகிறது. ஆனால், 'இந்துத்துவ காவி' இந்தியாவை 'சிவப்பாக' மாற்றுவதில் சற்றும் சளைத்ததல்ல. குண்டுகள் வெடிப்பதற்கான காரணங்களுள் ஒன்று, இந்திய முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பற்ற அச்ச உணர்விலேயே நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பதுதான். உண்மையான போர் துவங்குமுன் மனதளவில் எதிர்தரப்பினரை வலுவிழக்கச் செய்யும் உத்தி இது.

இந்திய முஸ்லிம்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் தீவிரவாதிகளாக்கப்பட்டது உண்மையாக இருக்கலாம். அதே போன்று இந்துக்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் அதிதீவிரவாதிகளாக இருப்பதும் உண்மையே! சிமி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை தத்தம் சமுதாயங்களை பிரதிநிதிப்பதாக சொல்லிக் கொண்டாலும் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட அடையாளங்களை கொண்டவை. செயல்வடிவிலான அதிதீவிரவாதத்தை இவ்வாறு ஒரு வரியில் சுருக்கிச் சொல்லலாம்: "உனது தீவிரவாதத்தை விட எனது தீவிரவாதம் சிறந்தது!"

ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை குண்டுவெடிப்புகளில் ஈடுபடும்போது இந்திய ஊடகங்கள் 'அடக்கி வாசிப்பதை'க் காண்கிறோம். அதே சமயத்தில் ஒரு வழக்கில் சிமி-யின் பெயர் அடிபட்டால் 'பத்திரிக்கைத் தர்மம்' உச்ச வேகத்தில் வெளிப்படுவதையும் காண்கிறோம். இந்த இரண்டு வித்தியாசமான அணுகுமுறைகளுக்கும் காரணம் வியாபாரம்தான். எந்தப் பத்திரிக்கை முதலாளியும் பெரும்பான்மையான இந்து வாசகர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார். ஊடகங்கள் தங்களை தேசிய சிந்தனை கொண்டவர்களென உரிமை கொண்டாடினாலும், நடைமுறையில் அவை பெரும்பான்மையினரை திருப்திப் படுத்தும் நோக்கம் கொண்டவைதான்.

காவல்துறை 'குற்றம் சாட்டப்பட்ட' நபர்களின் பெயர்களை திடீர் திடீரெனெ மாற்றுவது, ஒரு பத்திரிக்கையாளனின் கண்ணோட்டத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக இருக்கிறது. ('குற்றம் சாட்டப்பட்டவர்' என்ற பெயர்ச்சொல் இந்திய ஊடகங்களில் மிக அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் வார்த்தைகளுள் ஒன்று!). குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி என முதலில் சொல்லப்பட்ட பெயர் அப்துல் சுப்ஹான் குரேஷி; அதுவே பிறகு போலி 'என்கவுண்டரில் கொல்லப்பட்ட' அதிப் என மாற்றப் பட்டது.

அஹமதாபாத் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர் என்று காவல்துறையினர் சொல்லும் முப்தி அபுல் பஷர்தான் டில்லி குண்டு வெடிப்புகளுக்கும் காரணகர்த்தா என்று சொல்லப்படுவதை ஒரு பத்திரிக்கையாளனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பஷர் உண்மையிலேயே டில்லி குண்டு வெடிப்புகளுடன் சம்பந்தப் பட்டிருந்தால் அது நிகழ்ந்திருக்கவே செய்யாது. ஏனெனில், அந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது பஷர் காவல்துறையின் பாதுகாப்பில்தான் இருந்தார். மதரஸாவில் மார்க்கக் கல்வி பயின்ற ஒரு ஏழையான பஷர் எப்படி அஹமதாபாத் குண்டுவெடிப்பை அவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு நடத்தியிருக்க முடியும்? இந்திய மதரஸாக்கள் எப்போதிலிருந்து இதுபோன்ற 'தொழில்நுட்ப வல்லுனர்'களை உற்பத்தி செய்யத் தொடங்கின? அவ்வாறு நடக்குமானால் அது இந்திய அரசிற்கு மிக மகிழ்வைத் தரும் ஒன்றாக இருக்கும். மதரஸாக்களை மேம்படுத்த வேண்டிய தேவை மத்திய மதரஸா வாரியத்திற்கு இனி இருக்காது.

'நன்கு படித்த முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்புகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் காவல்துறையினர் சொன்னாலும், 'படித்தவர்கள்' என்று எவ்வகையிலும் சொல்ல முடியாதவர்களைத்தான் அவர்கள் கைது செய்கிறார்கள். முப்தி பஷர் இதற்கு சரியானதொரு உதாரணம்.

இந்திய ஊடகத்துறையில் ஒரு பகுதியினர் உளவுத்துறை அமைப்புகளின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். காவல்துறையினரின் அறிக்கைகளை புலனாய்வுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிடுகின்றனர். தொலைக்காட்சி நிருபர் ஒருவர் உளவுத்துறைக் குறிப்பு போன்றதொரு தகவலை வெளியிட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'நாடெங்கிலும் குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்பதற்காக 2001-ம் ஆண்டு சிமி அமைப்பு 200 இளைஞர்களை பணியிலமர்த்தியது' என்பதுதான் அந்த தகவல். இது உண்மையென்றால் நமது உளவுத்துறை அமைப்புகள் கடந்த 8 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தன?

முறையான விசாரணகள் நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை பதியப்படுமுன்னரே, காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் 'தீவிரவாதிகள்' என முத்திரை குத்தப்படுகின்றனர். சட்டமும் நீதிமன்றமும் அதன் பணியைத் தொடங்குமுன்னரே ஊடகங்கள் தீர்ப்பை வழங்கி விடுகின்றன. உதாரணமாக, "கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்ட தீவிரவாதி சைஃப் ஒரு போலி வாக்காளர் அட்டை வைத்திருந்தான்" (டைம்ஸ் ஆஃப் இந்தியா, செப் 21, பக்கம் 1, டெல்லி பதிப்பு).

ஊடகங்களின் 'முன்முடிவுத் தீர்ப்பு'களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமல்லவா?

இந்த அநீதிகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, முஸ்லிம்களோ அச்சத்தால் சூழப்பட்டவர்களாகவே தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். "அரசு என்பது ஒருங்கமைக்கப்பட்ட வன்முறை" என்று சொன்னார் காந்திஜி. டெல்லி ஜாமியா நகரில் நிகழ்த்தப்பட்ட போலி என்கவுண்டர் சம்பவம், சில குழப்பமான கேள்விகளை எழுப்புகிறது. 'இந்த சம்பவமே சந்தேகத்திற்கிடமானது' என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் இல்லாமலில்லை. உள்ளூர்வாசியான சகோதரி ஒருவர் சொன்னார், "எதிர் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதை யாரும் பார்க்கவில்லை. காவல்துறையினர்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்கள். எதிர்தரப்பினர் சுட்டதை யாராவது பார்த்ததாக எந்தப் பத்திரிக்கையிலாவது செய்தி வந்ததா?" அவர் மேலும் கேட்டார், "தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவ்வளவு காவலையும் மீறி எப்படி தப்பித்துச் சென்றார்கள்? அந்த வீட்டிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழிதானே இருந்தது? என்கவுண்டர் நடக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பது காவல்துறையினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் அவர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன்?"

அவர் மேலும் சொன்னது ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு பயங்கரமானதாக இருந்தது; "இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அவர்கள் (காவல்துறையினர்) யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கொலை செய்யலாம். இன்று அந்த இளைஞர்களுக்கு நேர்ந்தது நாளை என் சகோதரனுக்கு நேரலாம். ஏதோ ஒரு உப்புப்பெறாத காரணத்திற்காக, தான் நிரபராதி என்று நிரூபிக்கக்கூட அவகாசம் தரப்படாமல் அவன் கொல்லப் படலாம். அவர்கள் உங்களைக் குற்றவாளி என்று சொன்னால் நீங்கள் குற்றவாளிதான். மறுபேச்சிற்கே இடமில்லை. இது என்னைக் கடும் கோபத்திற்குள்ளாக்குகிறது"

இந்திய முஸ்லிம்கள், அச்ச உணர்வு, பாதுகாப்பற்ற சூழ்நிலை, ஆட்சியாளர்களின் பாரபட்ச போக்கு ஆகியவற்றோடு தீவிரவாத முத்திரையையும் சுமந்தவர்களாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 'முஸ்லிம்கள்' என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறு கும்பல் அவர்களின் வாழ்க்கை மற்றும் மதநம்பிக்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. 'குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள்' என்று யாராவது சொல்லும்போது என்னுள் வெறுப்புணர்வுதான் ஏற்படுகிறது. 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அடையாளம் தெரியாத ஒரு அமைப்பு, இந்திய முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற ஒளிவுமறைவு 'ஜிஹாதை' நடத்துகிறதாம். ஓர் உண்மையான ஜிஹாத் போராட்டம் ஒளிவுமறைவாக நடக்கவே முடியாது. இஸ்லாமிய சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அநீதிக்கெதிரான ஜிஹாத் போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட முறையிலேயே வெளிப்படையாக நடத்தப்பட்டனவே தவிர, அவை அடையாளம் தெரியாத நபர்களால் ஒருபோதும் நடத்தப் பட்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நம் நாட்டில், நாட்டைக் கொலைக்களமாக மாற்றத்துடிக்கும் ஒரு சிறு கொலைகாரக் கும்பலை காவல்துறையினரால் வளைத்துப் பிடிக்க முடியவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. இந்திய உளவுத்துறையினரின் கைவசம் ஏராளமான தகவல் சாதனங்களும் துப்புகளும் இருந்தும், பயங்கரவாதச் செயல்களை முறியடிப்பதில் அவர்களின் செயல்பாடுகள் பூஜ்யமாகவே இருக்கின்றன.

இந்தியாவின் 16 கோடி சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இருக்கும் பிரச்னை ஒன்று; அச்சவுணர்வுதான் அது! அவர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்கவும் யாரும் தயாராக இல்லை. இந்தியாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் முஸ்லிம்கள் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைக்கான தீர்வின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களேயல்லாது பிரச்னையின் ஒரு அங்கமாக அல்ல. இந்தியா அவர்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.

ஒரு முஸ்லிம் நண்பர் மூடி மறைக்காமல் சொன்னார், "கவி ரவீந்திரநாத் தாகூரின் 'மனம் அச்சமில்லாமல் இருக்கும்போது' எனும் கவிதை வரிகள் இப்போதெல்லாம் என் வீட்டுச்சுவரை அலங்கரிப்பதில்லை".


நன்றி: - முபஷ்ஷிர் முஷ்தாக்

தமிழில்: சகோ. ஸலாஹுத்தீன்.

Wednesday, November 19, 2008

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-1)

சத்தியமார்க்கம்.காம் தளத்தில், “இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை” என்ற தலைப்பில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அரசு ஒதுக்கியுள்ள கல்வி உதவித்தொகையைக் குறித்தும் அதனை பெறும் முறையினை குறித்தும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சுலைமான் என்பவர், “இந்தியா காஃபிர் நாடு என்றும், காஃபிர் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும்; அப்படிச் செல்லாதவர்கள் நரகத்தில் ஒதுங்குவார்கள்” என்றும் இந்திய அரசின் அந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு எச்சரிக்கையை முஸ்லிம்களுக்கு வைத்திருந்தார். அது சரி யான கருத்து தானா என்பதைக் குறித்து இங்கு காண்போம். முதலில் அவர் கூறிய கருத்து கீழே:

//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?’ என (மலக்குகள்) கேட்பார்கள். எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான் சென்றடையும் இடங்களி� ��் அது மிகக் கெட்டதாகும். (4:97) //- சுலைமான்.

முதலில் இந்தியா ஒரு காஃபிர் நாடு என்று சொல்வது வடிகட்டிய கயமைத்தனம் ஆகும். இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. இங்கே எல்லா மதத்தவர்களும் ஆட்சியில் பங்கு வகிக்கிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் வணக்க, வழிபாட்டுச் சுதந்திரம் இருக்கிறது. அவரவர்களுக்கென ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியாக வழிபாட்டுத்தலங்களும் உண்டு.

“இந்தியாவில் குடியுரிமை உள்ள எந்த ஓர் இந்தியனுக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் வழங்க அரசு மறுக்கக்கூடாது. இந்தியக் குடிமக்கள் தாம் நேசிக்கும் மதத்தைப் பின்பற்றவும், தாம் சார்ந்திருக்கும் மதம் அல்லது கொள்கை பற்றி எண்ண, எழுத, பிறருக்குப் போதிக்கவும் உரிமை பெற்றவர்கள்” என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. ஒருவரி ன் மதக் கொள்கையில் இன்னொருவர் கண்டிப்பாகக் குறுக்கிட முடியாது. இவ்வளவு வெளிப்படையான மதச் சுதந்திரம் வழங்கும் இந்திய நாட்டை ஒரு காஃபிர் நாடாகச் சித்திரிக்க முயல்வது அறியாமை மட்டுமல்லாது அயோக்கியத் தனமும் ஆகும். எந்த மதத்தையும் சாராத இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதைக் காஃபிர் நாடு என்று சொல்வது கண்ட���க்கத்தக்கது.

இந்தியாவிலுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் இது போன்று கூறுவதுண்டு. ஆனால் இந்தியநாடு எந்த மதத்தினரினது குடும்பச் சொத்து அல்ல. எந்த ஒரு மதத்தினரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. முஸ்லிம்கள் என்ற பெயரில் முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போதும் அது மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. முஸ்லிம் நாடு என்று அறிவிக்கப்படவில்லை. அதன் பிறகு வெள்ளையர்கள் ஆண்ட போதும் மத� ��்சார்பற்ற நாடாகவே இருந்தது. கிறிஸ்தவ நாடாக அறிவிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவும் மதசார்பற்றத் தன்மையிலிருந்து விலகி மதம் சார்ந்த நாடாக ஆகி விடவில்லை! இந்தியா காஃபிர் நாடு என்று சிலர் சொல்லி வந்தாலும் அதில் எள் முனையளவும் உண்மை இல்லை!

அவ்வாறு கூறப் படுவதை இஸ்லாத்தின் எதிரிகள் சிலரின் வஞ்சகப் பேச்சு, சூழ்ச்சி என்று கொள்க.

இனி சுலைமான் எழுதியது…

இவர், இந்தியாவில் குடியிருக்கும் முஸ்லிம்கள் காஃபிர் நாட்டில் குடியிருக்கிறார்கள் என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டு, “காஃபிர் நாட்டில் குடியிருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை” எனத் தனக்குத் தெரிந்த இஸ்லாத்தை, மற்ற முஸ்லிம்களுக்க� �� விளக்க வந்திருக்கிறார். - (இந்தியா காஃபிர் நாடல்ல. என்பதை மேலே விளக்கியுள்ளோம்.) - அதற்கான இஸ்லாத்தின் ஆதாரமாக திருமறைக்குர்ஆன் 004:097 வசனத்தையும், திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸையும் எடுத்தெழுதியிருக்கிறார். இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக கூறப்பட்ட இந்த ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனத்தை எடுத்து இஸ்லாம் � ��ூறவராத ஒரு கருத்தை நிலைந���ட்ட முயன்றுள்ளார். முதலில் திருமறைக்குர்ஆன் வசனத்தையும் அது எச்சூழலில் எதற்காக இறக்கப்பட்டது என்பதையும் பார்த்துவிட்டு பிறகு திர்மிதியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலாமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக்கூடாதா?” என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம் அது � ��ெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன், 004:097)

இந்த வசனத்தைக்காட்டி இந்தியாவில் வாழ முடியாத முஸ்லிம்கள் அனைவரும் நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும் என முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்கிறார் சுலைமான். அவர் வைத்த 004:097வது வசனத்தின் பின்னணி என்ன?

புகாரி, 4596 வது ஹதீஸ் இது பற்றி விவரிக்கிறது:

மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தத ாகக் கூறினார்கள்.

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும், அல்லது அவர் (வாளால்) அடிபட்�� �ுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி ‘இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?’ என வினவுவார்கள். அதற்கு அவர்கள், ‘பூமி�� �ில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்’ என பதிலளிப்பார்கள். ‘அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?’ என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.

மேற்கண்ட ஹதீஸிலுள்ள முதல் பத்திக்கான விளக்கம்: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) மக்காவில் ஆட்சிராக இருந்தபோது இது நடந்தது. அப்போது ஷாம் நாட்டினருக்கெதிரான போருக்காக வேண்டி மதீனாவிலிருந்து ஒரு படையை அனுப்பிவைக்க வேண்டுமென கலீஃபாவிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது (ஃபத்ஹுல் பாரி)

இரண்டாவது பத்திக்கான விளக்கம்: நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவிட்ட பிறகு மக்காவிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களில் சிலர் எதிரிகளுக்கு அஞ்சித் தங்களை இனம் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பத்ருப் போர் வந்தது. மக்கா குறைஷியர் இந்த முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி பத்ருப் போருக்கு அழைத்துச் சென்று விட்டனர். பத� ��ரில் எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதைக் கண்ட இந்த முஸ்லிம்களின் உள்ளத்தில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. ‘குறைவான எண்ணிக்கையிலுள்ள முஸ்லிம் அணியினரை, அவர்களது மார்க்கப் பற்று ஏமாற்றிவிட்டது’ என்று இவர்கள் கூறினர்.

பின்னர் எதிரணியில் நின்ற இவர்கள் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தனர். இவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய போது வானவர்கள் கேட்ட கேள்வி மற்றும் இவர்கள் அளித்த பதில் குறித்தே (004:097) வசனம் அருளப்பட்டது. என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கினார்கள்.

உண்மையிலேயே இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இந்த முஸ்லிம்களுக்கு இல்லாவிட்டாலும், இணைவைப்பாளர்களின் எண்ணிக்கையைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு இவர்களும் ஒரு காரணமாகிவிட்டார்கள் என்ற அடிப்படையிலேயே அல்லாஹ் இவர்களைக் கண்டிக்கிறான்… (ஃபத்ஹுல் பாரி)

இஸ்லாம் மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளைச் சரிவர நிறைவேற்ற விடாமல் மக்காவின் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களைத் தடுத்து தொந்தரவுபடுத்திச் சித்ரவதை செய்து வந்தனர். மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறு இணைவைப்பாளர்களின் ஊரில் இருக்க வேண்டாம் என முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் நாட ு துறந்து சென்றார்கள். அவர்களை அரவணைப்பதற்கு ஒரு நாடு ஆவலோடு காத்திருந்தது.

இன்னும், முஸ்லிம்களில் ஹிஜ்ரத் செல்ல இயலாதவர்கள் மக்காவிலேயே தங்கிவிட்டனர். அப்படித் தங்கிய வர்களில் ஹிஜ்ரத் செல்லச் சக்திப் பெற்றிருந்தும் அவர்கள் நாடு துறந்து செல்லாமல் இருந்தனர். நாடு துறந்து செல்லத்தடையாக அவர்களின் செல்வங்களின் மீதான ஆசையாக இருந்திருக்கலாம் (அல்லாஹ் மிக அறிந்தவன்) ஹிஜ்ரத் செல்ல சக்தியிருந்தும் செல்லாமல் இருந்தவர்களையே 004:097வது வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான். உண்மையில் ஹிஜ்ரத் செய்ய இயலாத பலவீனமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது குற்றமில்லை. அவர்களின் பிழைகளை இறைவன் பொறுத்துக் கொள்வான் என்று இறைவன் அடுத்தடுத்த வசனங்களில் கூறுகிறான்

ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களைத் தவிர- எந்த உபாயத்திறனும் அற்றவர்கள்; வெளியேறும் எந்த வழியையும் அறியமாட்டார்கள். அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (திருமறைக்குர்ஆன், 004:098, 099) மேலும், இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்வதின் சிறப்புப் பற்றி 004:100வது வசனம் விளக்கமாக எட ுத்துரைக்கிறது.

எனினும் மக்கா வெற்றிக்குப் பின் உலக முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் ஒன்று இல்லை. எனவே திருமறைக்குர்ஆனில் கூறப்படும் அத்தனை ஹிஜ்ரத் வசனங்களும் முஸ்லிம்களுக்கு இல்லை! அதாவது இன்றைய முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் எனும் நாடு துறந்து செல்வது கடமை இல்லை! இதை நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அறிவித்து விட்டார்கள்.

”மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் ‘இவ்வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது. இனி அறப் போர் செய்வதும் நல்ல எண்ணமும் தான் உள்ளது. எனவே போருக்காக அழைக்கப்பட்டால் உடனே புறப்படுங்கள்” என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், அபூதாவூத். நஸயீ)

மார்க்கத்திற்காக நாடு துறத்தல் அளப்பெரும் நன்மையை அள்ளித்தரும். ஆனால் ஹிஜ்ரத் பயணம் நபியின் காலத்தோடு முடிந்து விட்டது. மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத காலத்தில்தான் ஹிஜ்ரத் கடமையாக இருந்தது. அதன் பிறகு இஸ்லாம் மேலோங்கி இன்றுவரை வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற இயலாத நிலைமை எங்குமே இல்லை! அதனால் இந்திய வாழ் முஸ்லிம் கள் நாடு துறந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்திய மண்ணில் குடியுரிமைப் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தியாவில் வாழ உரிமை இருக்கிறது. முஸ்லிம்களும் இ ந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை முஸ்லிம்களை வெளியேற்ற யாராவது வன்முறையில் இறங்கி இங்கே வாழ்வே முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவார்கள் எனில் சொந்த மண், சொந்த உடமையைப் பாதுகாப்பதற்காக அறப்போரில் இற�� �்கி அதில் இறந்தாலும் அதுவும் முஸ்லிம்களுக்கு நன்மைதான்.

//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.// - சுலைமான்.

- இந்த ஹதீஸுக்கான விளக்கம் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-2)

முஷ்ரிகீன் (இணை வைப்பவர்கள்) மத்தியில் முஸ்லிம்கள் வாழலாமா?

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களும் வாழ்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரியம் என்பது போலவும், அவ்வாறு வாழ்தல் நடைமுறைக்கும் கூட ஒத்து வராது என்பது போலவும் சிலர் புனைந்து கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இதன் பின்னணி என்ன என்பதை இறைவன் அறிவான். எனினும் இதனூடான ஓர் அரசியல் சூழ்ச்சியை முதலில் சமூகம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் அரேபிய மண்ணில் நபி(ஸல்) அவர்களால் புனர் நிர்மாணிக்கப்பட்ட அக்காலகட்டத்திலேயே கேரள கடல் வழியாக, சமூகத்தில் தாழ்த்தப்பட்டு, சமூக நீதி கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களிடையே காலூன்றி விட்டதை வரலாறு தெளிவாக அறிவிக்கின்றது. அதன் பிந்தைய குறுகிய கால கட்டத்திலேயே இந்தியாவில் சமூக நீதி மறுக்கப்பட்டு ஒடுக்கப்படட மக்களுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வழங்கி அவர்களை சமூக நீரோட்டத்தில் இஸ்லாம் மேலே கொண்டு வந்து விட்டது.

இதனைப் பொறுக்க இயலாத சில தீயசக்திகள் அக்கால கட்டத்திலேயே இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவிலிருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருவதையும் இந்திய வரலாறு பதிந்து வைத்துள்ளது. இதன் பின்னணியிலேயே இந்தியா ஒரு காஃபிர் நாடு என்றும், முஸ்லிம்கள், முஷ்ரிகின்கள், காஃபிர்கள் மத்தியில் வாழ இஸ்லாத்தில் தடை உள்ளது என்றும் இந்திய கலாச்சார, பண்பாட்டு வரலாற்றையும், இஸ்லாமிய கொள்கைகளையும் தங்களுக்கு இயைந்த வகையில் வளைத்தொடித்தும், திரித்தும் முஸ்லிம்கள் மத்தியிலேயே ஓர் சந்தேகமான, இந்தியாவில் வாழ்வதில் ஒரு பிடிப்பற்ற சிந்தையை உருவாக்க முயல்வதைக் கவனமாகக் கண்டு கொள்ள வேண்டும்.

இனி முதலில் இஸ்லாத்தில் அவ்வாறு முஷ்ரீகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு தடையுள்ளதா என்பதை ஆதாரத்துடன் காண்போம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருமறைக்குர்ஆன் அறிவுக்குப் பொருந்தாத எந்த வசனங்களையும் தன்னகத்தேக் கொண்டிருக்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அறிவுக்கு பொருத்தமில்லா எந்த வார்த்தையையும் மொழிந்ததில்லை. மேலும் அது ஒருவரால் செய்ய இயலாத, அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு கட்டளையையோ, கடமையையோ நிர்பந்திக்க�ும் இல்லை.

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் (அறியாது) தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் செ� ��்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவ� �� செய்தருள்வாயாக!” (அல்�ுர்ஆன், 002:286)

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், ‘என்னால் முடிந்த விஷயங்களில்’ என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.” (முஸ்லிம்: 3803, புகாரி: 7204 )

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழியும் இஸ்லாம் மனிதனின் சக்திக்கப்பாற்பட்ட சுமைகளைச் சுமத்துவதில்லை என்று வாக்களிக்கிறது! நாங்கள் செவியேற்றுக் கீழ்படிந்து நடப்போம் என்று சொன்னவர்களையும் கூட, “உங்களால் இயன்றவரை நிறைவேற்றுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் திருத்தம் செய்திருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இன்று சிலர் கூற முற்படுவது போன்று முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு விதி இருக்குமாயின் அது தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சுமையான காரியம் என்பதைத் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை.முஸ்லிம்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழக்கூடாது என்பது இக்காலகட்டத்தில் மட்டுமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லாதது. இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் என்றால் உலகளாவிய மக்களிடையே அது தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

முஷ்ரிகீன் மத்தியில் நபியவர்கள்

நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கை காலமெல்லாம் அவர்கள் முஷ்ரிகீன் மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.

“குல் யா அய்யுஹல் காஃபிரூன் - (ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.” (அல்குர்ஆன் 109:001)

என்ற வசனம் இஸ்லாத்தை நிராகரித்த முஷ்ரிகின்களை அழைத்தல்லவா பேசுகிறது? இன்னும் முஷ்ரிகீன் கடவுட் கொள்கைகளுக்கு பதிலடியாக திருக்குர்ஆனில் பல வசனங்கள் அருளப்பட்டதையும் காண முடிகிறது.

முஷ்ரிகீன் கடவுட் கொள்கையை விமர்சித்திருக்கும் எந்த ஒரு குர்ஆன் வசனத்திலும் அவர்களிடையே வசிக்க வேண்டாம் என்றொரு கட்டளையைக் காண இயலாது.

ஒருமுறை, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர் (ரலி)அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்” என்று கூறினார்கள்.அவ்வாறே உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார� ��கள். அப்போது அவர்கள் இருவரும், ”ஏன் அழுகிறீர்கள்? அவனுடைய தூதர்(ஸல்) (நம்மோடு இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன்(ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)” என்று கூறி அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். (முஸ்லிம்: 4849)

(“உம்மு அய்மன் என் தாய்க்குப்பின் தாய்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)

இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த காலம் விண்ணுக்கும், மண்ணுக்கும் இறைச்செய்தியின் தொடர்பு இருந்த காலமாகும். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் விண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த இறைச்செய்தி முற்றுப்பெற்று விட்டதே எனக்கூறி உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அழுதார்கள். இறைச்செய்தியின் சுவையை அனுபவித்தவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள தொடர்பு - நபியவர்களின் மறைவோ� ��ு முடிந்து விட்டதே என அழுதிருக்கிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த வஹியின் தொடர்புடைய பொற்காலமெல்லாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில்தான் வாழ்ந்தார்கள். யூதர்களிடம் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியிருக்கிறார்கள். மற்றொரு சமயம் யூதரிடம் தம் கவசத்தை அடமானம் வைத்திருந்தார்கள், அதையும் திருப்பாமலேயே மரணமடைந்தார்கள் என்பது குறிப்ப ிடத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே முஷ்ரிகீன் மத்தியிலேயே இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். நபியவர்களின் மறைவிற்குப் பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற பிரச்சாரம் இன்றுவரை ஓய்ந்து விடவில்லை! இறுதிநாள் வரையிலும் முஷ்ரிகீன் மத்தியில் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதாவது முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய ்து கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன்

எவ்வாறு முஷ்ரிகீன் அதிகமாக இருந்த நேரத்தில் முஹம்மது(ஸல்) அவர்கள் மத்தியில் வாழ்ந்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்களோ, அது போன்றே முஸ்லிம்கள் அதிகமாக இருந்த காலத்தில் முஷ்ரிகீன் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சுபிட்சமாக வாழ்ந்துள்ளனர்.

“(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரைப் பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 009:006)

நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழ்ந்தார்கள், முஷ்ரிக்குகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்தை முறித்து எதிரிகளுடன் இணைந்து துரோகம் இழைத்தவர்களுடன் போர் செய்தார்கள். இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவர்களிடம் குடியுரிமை வரியென இஸ்லாமிய ஆட்சியர் ஜிஸ்யா வரி வசூலிப்பார்கள். இந்த வரி இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதற்குரிய சிறந்த ஆதாரமாகும்.

“உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு உன் பெற்றோர் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்.” (அல்குர்ஆன், 029:008. 031:015)

இணை வைக்கும் விஷயத்தில் மட்டும் பெற்றோர்களுக்குக் கட்டுப்படாமல், மற்ற உலக விஷயங்களின் இணைவைக்கும் முஷ்ரிக் - காஃபிர் பெற்றோர்களுக்கு கடமைகளைச் செய்ய வேண்டும் என இவ்வசனம் கட்டளையிடுகின்றது. முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதியில்லை எனில், இறைவனின் இக்கட்டளைக்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.

மேலும்,

“மார்க்கத்தால் எதிரியில்லாத முஷ்ரிக்கீன் - காஃபிர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள இஸ்லாம் கூறுகிறது”. பார்க்க: அல்குர்ஆன், 060:008, 009. வசனங்கள்.

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் முஷ்ரிகத் - இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?” என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அ�� �ர்கள், “ஆம்! நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள். (புகாரி: 2620)

நபியவர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பு அன்றும், இன்றும், யுக முடிவு நாள் வரையும் செயல்படுத்தத்தக்கது.

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களோ வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை வரலாற்றிலிருந்தும், நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும் எடுத்துக் காட்ட இயலும். விரிவஞ்சி இத்துடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.

இனி, முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்ற கருத்திலுள்ள ஹதீஸைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்அம் கோத்திரத்தாரை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள் . அவர்களில் சிலர் ஸஜ்தாவின் மூலம் உயிரைக் காத்துக் கொள்ள முயன்றனர். அப்படையினர் அவர்களைக் கொன்று விட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதி நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்ட�� �ம் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று அப்போது கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். “இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாது” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (திர்மிதி)

இதே கருத்தில் வரும் மற்றொரு ஹதீஸ்.

“முஷ்ரிகின்களுடன் குடியிருக்காதீர்கள்! அவர்களை மணக்காதீர்கள்! யார் அவர்களுடன் வசிக்கவோ குடியிருக்கவோ செய்கிறாரோ அவரும் அவர்களைப் போன்றவரே!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இந்த நபிமொழிகள் முர்ஸல் வகையை சேர்ந்ததாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹைஸ் பின் அபீ ஹாஷிம் என்பவர் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜரீர்(ரலி) வழியாக இந்த ஹதீஸை அறிவிக்கிறார். மற்றொரு இடத்தில் நபித்தோழரை விட்டுவிட்டு நேரடியாக நபியவர்களிடம் கேட்டதாகவும் அறிவிப்பதால் இது முர்ஸல் - அறிவிப்பாளர் தொடர் அறுந்த ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஹஸன் � ��ன்ற தரத்தைச் சேர்ந்தது. ஆனால் சட்டத்தை வகுக்கும் ஸஹீஹான ஹதீஸின் தரத்தைச் சேர்ந்ததல்ல.

ஒரு ஹதீஸை வைத்துச் சட்டம் வகுக்க வேண்டும் எனில், அந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் உள்ளதாக இருக்க வேண்டும்; முக்கியமாக குர்ஆனுக்கு முரண்படக் கூடாது என்பது ஹதீஸ் கலை சட்டமாகும். மேலும், மேலே கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முஸ்லிம்கள் முஷ்ரிகின்களுக்கு மத்தியிலோ அல்லது முஷ்ரிகின்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலோ வாழ இஸ்லாத்தில் தடையில்லாததைத் தெளிவாக எடுத்தியம்புவதால் ம�� �ர்ஸல் வகையை சேர்ந்த மேற்கண்ட ஹதீஸை வைத்து அவ்வாறு ஒரு சட்டம் இஸ்லாத்தில் வகுக்க வேண்டிய அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை.

இனி இந்த ஹதீஸின் விளக்கத்தை காண்போம்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு கோத்திரத்தினரை நோக்கிப் படையை அனுப்பி வைத்தார்கள் என்று வருகின்றது. இதிலிருந்து அந்தக் கோத்திரத்தினர் நபியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நபி(ஸல்) அவர்கள் அனுப்பிய படையினரிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சிலர் ஸஜ்தா செய்திருக்கிறார்கள். அவர்களைப் படையினர் கொன்று விட்டனர். சரணடைந்தவர்களைக் கொல்வ� ��ு தவறு என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

இந்தத் தருணத்தில்தான், “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திருமறைக்குர்ஆன் வசனங்களும், வேறு நபிமொழிகளும் முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ அனுமதிப்பதை மேலே விளக்கிய ஆதாரங்கள் தெளிவிக்கின்றது. நபி(ஸல்) அவர்களும் அவ்வாறு வாழ்ந்திருக்கிறார்கள் எனும்போது திருமறைக் குர் ஆனுக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் எதிராக ஒரு சட்டத்தை வகுக்கும் வகையில் இந்த முர்ஸலான ஹதீஸைக் கொண்டு வந்து வலிந்து பொருத்தக் கூடாது.

அப்படியெனில் மேற்காணும் முர்ஸலான ஹதீஸில் வரும், ”முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) கூறியதன் பொருள் யாதெனில், “முஷ்ரிகீன் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட முஷ்ரிகின்களின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இஸ்லாத்தைவிடப் பிறவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முஷ்ரிக ீன் மத்தியில் - வாழும் முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக்கொள்கிறேன்” என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

இப்படி விளங்கினால் திருமறை வசனங்களுக்கும், வேறு நபிமொழிகளுக்கும் இந்த ஹதீஸும் எவ்விதத்திலும் முரண்படவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

ஹிஜ்ரத் எப்பொழுது, யாருக்குக் கடமையாகும் என்பதையும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு அது கடமையா என்பதையும் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் காண்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Wednesday, November 12, 2008

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக - ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளில் எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கி புனிதப் பயணத்தை மேற்கொண்டு ''ஹஜ்'' எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

''மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!'' (அல்குர்ஆன் 022:028) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று கால காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.


'என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம்.
நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்." (அல்குர்ஆன், 037:100-108)

துல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று! நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ''குர்பானி'' எனும் பிராணிகளை அறுத்து பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

குர்பானி கொடுக்க நாடுபவர்

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)

குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).

நபி(ஸல்) அவர்கள் 'கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா! என்றார்கள். பிறகு அதைக் கல்லில் தீட்டு! என்றார்கள். நான் அப்படியேச் செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

குர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே!

'மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்." (புகாரி, தஃலீக்).

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்?

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)

குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக்கொள்ளங்கள், தர்மமும் செய்யுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்து பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்திருக்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகம், ஒரு மாட்டை இவற்றை குர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)

அறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா? பிறகா?

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம்(இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி , முஸ்லிம்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் 'முஸின்னாவை" விட சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எங்கு அறுப்பது?

வீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.

முஸல்லா என்னும், திடலில் நபி(ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தனர். (புகாரி , அபூதாவூத்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி, முஸ்லிம்)

ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்று கூறியதிலிருந்து வீட்டில் வைத்து அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

பெண்கள் அறுக்கலாமா?

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)

குர்பானி கொடுக்கும் நாட்கள்

தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்)

துல்ஹஜ் மாதம் பெருநாள் தினமாகிய பிறை 10லிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.

--~--~---------~--~----~------------~-------~--~----~
Thanks: Visit: http://www.darulsafa.com

Saturday, November 8, 2008

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.
வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் சென்னையில் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.

•••

அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி "இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி'' என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான "அஹ்பே ஹதீஸ்' இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.

2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்'' என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?

நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.

•••

ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் "தீவிரவாதிகளின் குடும்பம்' என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.

நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; "குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்'' என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.

செப் 2001ல் "சிமி' தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் "சிமி' உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் "சிமி' தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் "அரசை எதிர்த்துப் பேசினார்' என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.

அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.

யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், "அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்', தாங்கள் "சிமி' உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.

அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.

மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: "எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.''

•••

அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.

மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே "இவர் சிமி உறுப்பினர்' என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது "சிமி' யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.

முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், "இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் "சிமி'க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; "இந்துஸ்தான் டைம்ஸூ'க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.

•••

அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.

இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். "பாண்டே' கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.

ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் "சிமி'யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த "புனிதப் போராளி' (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.

ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: "இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?''

குவாஸ்மி "சிமி' உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.

தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: "நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.''

• குப்பண்ணன்
Thanks : tamilcircle. net

அமெரிக்காவிrற்கு தடியெடுத்த காலம் போய் தடிபிடிக்கும் காலம் வந்து விட்டது

இரண்டாம் உலப்போரை முடிவுக்கு கொண்டுவர முன்னால் ஜப்பான் தலைநகர் ஹீரோஷீமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அனுஆயுதங்களை முதன்முதலாக உபயோகித்து பல இலட்சக்கணக்கான உயிர்களை குடித்த பின் தன்னை ஒரு வல்லரசாக அறிமுகப்படுத்திக்கொண்ட பெருமை அமெரிக்காவுக்கு உண்டு, அது தன் இள இரத்தம் ஓடிய காலம், அதிலும் 1991 ல் ரஷ்யாவை துண்டாடியபின் போட்டியற்ற வல்லரசாக திகழ்ந்தது. பல வெற்றிகளை குவித்தது, இந்நிலை சற்று சற்றாக குறைய ஆரம்பித்தது, இருந்தும் சீனா போன்ற நாடுகளையும் உளவு விமானங்கள் மூலம் உளவுபார்த்தது, இதை பொருத்துக்கொள்ளாத சீனா (செப்டம்பர் பதினொன்று, இரண்டாயிரத்தி ஒன்று நிகழ்ச்சிக்கு முன்னர்) அவ்விமானத்தை தரையிரங்கச்செய்து, அமெரிக்காவை மன்னிப்புக்கேட்க வைத்து பின்னர் சரக்கு விமானத்தில் அதை பிரித்து குப்பை போல் அனுப்பிவைத்தது.
இந்நிலையிலேதான் செப்டம்பர் பதினொன்று, இரண்டாயிரத்தி ஒன்று நிகழ்ச்சி அமெரிக்காவை உலுக்கியது, இதன் உண்மை இன்றும் மர்மமாகவே உள்ளது, இதை சாக்காக வைத்துக்கொண்டு அமெரிக்கா விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையில் கப்பம் கட்ட மறுத்த நாடுகளையெல்லாம் மிரட்ட ஆரம்பித்தது, இதில் ஆப்கானிஸ்தான், ஈராக், சூடான், லைபீரியா, ஈரான், சிரியா, வடகொரியா, கூபா, வென்சிவெல்லா போன்ற நாடுகளும் அடங்கும்.
முதலில் ஆப்கானிஸ்தானை கைவைத்தது, தாலிபான் அரசை அகற்றி பலரை பிணைக்கைதிகளாக்கி குவாட்னாமோ சிறையில் அடைத்தாலும் இன்றும் அவர்களின் ஆதிக்கத்தை அமெரிக்காவால் தடுக்கமுடியவில்லை, அதே தாலிபான் ராணுவ பீரங்கிகளில் வலம் வருகின்றனர்.
2 வதாக ஈராக்கை சின்னாபின்னமாக்கி முன்னால் ஈரான் ஈராக் போரில் அனுஆயுதங்களை ஈராக்கிற்கு வழங்கியது அமெரிக்காதான், தனக்கு எதிரான சாட்சியாக சத்தாம் ஹுஸைன் மாறிவிடலாம் என அஞ்சியதால் நீதியற்ற நீதிமன்றங்களின் மூலம் அவசர அவசரமாக சத்தாமை எவ்வித சப்தமின்றி இரவோடு இரவாக தூக்கிலிட்டது அமெரிக்கா, பின்னர் ஒராண்டில் அமைதியை கொண்டு வருவோம் என மார்தட்டியது ஆனால் அமெரிக்காவினால் ஐந்தாண்டுகள் முடிந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை
வடகொரியா தொடர்ந்து தன் அனு ஆயுத தயாரிப்புகளை செய்துகொண்டே இருக்கிறது, அதே போல் ஈரானும் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆனால் அமெரிக்காவால் கூட்டத்தை மட்டும் கூட்டமுடிகிறது, ஒன்றும் செய்யமுடியவில்லை.
சீனாவின் முன்னேற்றத்தை தடுக்கமுடியாமல் தானும் அத்துடன் சேர்ந்து பல வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்து கொண்டது,
ரஷ்யாவின் ஆட்டங்களை இன்னும் தடுத்து நிறுத்தமுடியவில்லை, சற்று முன் செசன்யா வில் தன்னுடைய மூக்கை ரஷ்யா தினித்த போதும் அமெரிக்காவால் ஒன்றும் செய்யமுடியவில்லை, தற்பொழுது ஜோர்ஜியாவின் விஷயத்திலும் ரஷ்யாவின் ஓட்டு ஐநா சபையில் பாலஸ்தீன் , ஈரான், சிரியாவின் விஷயத்தில் அமெரிக்காவிற்கு தேவை என்பதால் அமெரிக்கா கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தான் இருந்தது, ஒன்றும் செய்ய முடியவில்லை.
கருப்பின அமெரிக்கர்களின் போராட்டங்களை தடுக்க முடியவில்லை இதே நிலை பராசீல் மற்றும் வென்சுவெல்லாவிலும் தொடர வாய்ப்புள்ளது,
மெக்ஸீகோ, பொலிவியா,( Bolivia ), ஹந்த்ராஸ் (Honduras) போன்ற நாடுகளில் அமெரிக்க தூதர்களையும் துரத்திய செய்தியும் சமீபத்தில் செய்திகளாக வந்தன.. அமெரிக்கா ஒன்றுகூட பேசமுடியவில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் 60 ஆண்டுகளுக்கு மேல் ஜப்பானில் நங்கூரம் போட்டுள்ள அமெரிக்கப்படையினரை வெளியேற்றிவிட்டு, அந்நாட்டு படையினரேயே அவ்விடத்தில் நிறப்ப, மக்கள் வாக்கெடுப்பு வேட்டை நடந்துள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன
பொருளாதாரப்பின்னடைவை அமெரிக்கா சந்தித்துவிட்டதாக அந்நாட்டு வங்கியே தற்பொழுது அறிவித்துவிட்டது.
கிழடுதட்டிவிட்டால் உடனே மரணித்துவிடவேண்டும் என்பது அவசியமல்ல, ஆனால் சுய சக்தியை இழந்து தடியை தரையில் ஊண்டி நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதையே மேலேயுள்ள வெங்காயவெடி நிகழ்ச்சிகள் காட்டுகின்றன, சில காலங்களில் சுயநினைவைக்கூட அந்நாடு இழக்கக்கூடும்.
ஒரு காலத்தில் பாரசீக, ரோமானியப்பேரரசுகள் கொடிகட்டிப்பறந்தன. நபியவர்கள் காலத்திலேயே இவ்விரண்டு பேரரசுகளுக்கும் இஸ்லாமியர்களால் சாவு மணி அடிக்கப்படும் என்ற நற்செய்தி சொல்லப்பட்டு நபியவர்களுக்குப்பின் குறுகியகாலத்திலே சாவுமணியடிக்கப்பட்டது,
பழங்கால எகிப்தியர்கள் நாகரீகத்தில் உயர்ந்தோங்கியவர்கள், அவர்களின் ஆனவத்தால் அவர்களும் அழிக்கப்பட்டார்கள்.
இவ்வாறே பிரான்சு மற்றும் ஜெர்மனியும் வல்லரசுகளாக இருந்து வீழ்ச்சியடைந்தது நாம் அறிந்ததே.
இங்கிலாந்தின் ஆட்டம் ரொம்பவே இருந்தது, இப்பொழுது பலமிழந்துவிட்டது,
சோவியத் யூனியன் ரஷ்யாவிற்கும் என்ன நடந்தது என நாம் அறிவோம்.
இதே நிலையைத்தான் இன்று அமெரிக்காவும் சந்தித்துள்ளது.
எனவேதான் இறைவன் மனிதவாழ்வைப்பற்றி குறிப்பிடும்போது :
ஆரம்பத்தில் (குழந்தைப்பறுவத்தில்) பலஹீனத்தையும், பின்னர் (வாலிபப்பருவத்தில்) பலத்தையும், இந்த பலத்திற்குப்பின் (வயோதிபத்தில்) பலவீனம் மற்றும் நரையையும் கொடுத்துள்ளதாக இறைவன் குறிப்பிடுகிறான்..
அதற்கு எடுத்துக்காட்டாக : வானத்திலிருந்து மழையை இறக்கி பின்னர் அதை பூமியடியில் பல ஊற்றுகளாக ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு நிறங்களையுடைய பயிர்களை முளைக்கச்செய்து, அவை பின்னர் உலர்ந்து மஞ்கள் நிறமாகி, எதற்கும் உதவாத கூளங்களாகி விடுகின்றன. என அதே இறைவனே குறிப்பிடுகின்றான்.
இதே நிலை இச்சமுதாயத்தின் உதாரணமும் கூட என இறைவன் நமக்கு விளக்கிச்சொல்ல விரும்புகிறான்.
எனவே எவரும் நிரந்தர பலசாலியாகவோ, நிரந்தர வாலிபப்பருவத்திலே இருக்கமுடியாது என்பதே இறைவனின் விதிமுறையாகும்
எனவேதான் இறைவன் கூறுகிறான்;
{سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلاً} (الفتح: 23).
இவ்வாறே இதற்கு முன்னும் நடந்தது என்பதே இறைவனது நடைமுறையாகும், இறைவனது நடைமுறைகளில் அறவே மாற்றங்கள் ஏற்படாது 48:23

எனவே அமெரிக்காவின் கைவிரல்கள் பலமிழந்துவிட்டன, பொருளாதாரநிலையை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறது, மத்தியகிழக்கு நாடுகளிடம் இனிமேல் உறிஞ்ச இரத்தமில்லை, எனவே தடியெடுத்த காலம் போய் தடிபிடிக்கும் காலம் அமெரிக்காவிrற்கு வந்து விட்டது
அவ்விடத்தை நிறப்பப்போவது சீனாவா ? திரும்பவும் ரஷ்யாவா? அல்லது இந்தியாவா? காலம் பதில் சொல்லும்

நன்றி: மௌலவி முஹம்மது இப்ராஹீம்